சென்னை, மே 2- கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் கருத்தில்கொண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி தாமதமான மற்றும் 2019–20ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் உள்பட பல்வேறு வித மான வருமான வரி கணக்குகளை இம்மாதம் 31–ந்தேதி வரை தாக்கல் செய்யலாம். இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரி யம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அதனால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைக் கருத் தில்கொண்டு பல்வேறு விதமான வருமான வரி மற்றும் கணக்குகளைத் தாக்கல் செய்ய கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று வரி செலுத்துவோர் உள்பட பல்வேறு தரப்பி னரிடமிருந்து கோரிக்கைகள் வந்தன. அதனை ஏற்று, கடந்த மார்ச் 31–ந்தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டிய 2020–21ம் ஆண்டு மதிப்பீட்டுக்கான வருமான வரி சட்டப் பிரிவு 5ன் கீழ் திருத்தப்பட்ட வரு மான வரி கணக்கு மற்றும் பிரிவு 4ன் கீழ் தாமத மான கணக்கு தாக்கல் ஆகியவற்றை தாக்கல் செய்ய மே மாதம் 31–ந்தேதி வரை கால அவ காசம் நீட்டிக்கப்படுகிறது. கடைசி தேதி வரை கணக்கு தாக்கல் செய்யாமல் கடந்த ஏப்ரல் மாதம் 1–ந்தேதிக்குப் பிறகு சட்டப் பிரிவு 148ன் கீழ் நோட்டீஸ் பிறப்பிக்கப் பட்டவர்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் மே மாதம் 31–ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. அது போல, தகராறு தீர்மானக் குழு (டிஆர்பி) ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்வ தற்கும், வருமான வரித் துறை ஆணையரி டம் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசமும் மே மாதம் 31 வரை நீட்டிக்கப்படுகிறது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.