சென்னை, ஜூலை 24- தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத் தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னை என்விரோ சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமி டெட் சார்பில் மணலி மண்டலத்தில் நடை பெற்றது. சென்னை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணி புரிந்து வந்த தொழிலாளர்களுக்கு அவர்களு டைய வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் வேலைவாய்ப்பு வழங்க மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ஏற்கனவே உர்பேசர் ஸ்மித் லிமிடெட் நிறு வனத்திலும், சென்னை என்விரோ சொலியூ ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலும் கணிசமான அளவு தொழிலாளர்கள் அவர்க ளுக்குரிய தகுதியின் அடிப்படையில் பணி யில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
எஞ்சியுள்ள தொழிலாளர்களுக்கும் அவர் களுடைய வாழ்வாதாரம் பாதிக்காத வகை யில் வேலைவாய்ப்பினை வழங்க மாநக ராட்சியின் ஆலோசனையின்படி என்விரோ சொலியூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவ னத்தின் சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில், பேட்டரியால் இயங்கும் வாகன ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் வாகன உதவியாளர்கள் ஆகிய பணிகளுக்கு 214 தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய் யப்பட்டு அவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படும். தொடர்ந்து இது போன்று வேலைவாய்ப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத் தின் கீழ் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு உரிய பணி வழங்கப்பட்டு அவர்களின் வாழ் வாதாரம் பாதுகாக்கப்படும்.