சென்னை, மே 30 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்பையும மீறி சொத்து வரியை உயர்த்துவதற்கான தீர்மானம் சென்னை பெருநகர மாநகராட்சியில் நிறைவேறியது. மாநகராட்சி மாமன்றக் கூட்டம் திங்களன்று (மே 30) ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில் மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது. 3 நிமிடங்களில் 101 தீர்மானங்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில், சொத்துவரியை உயர்த்துவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் உள்ளிட்ட 39 பேர் தெரிவித்த ஆட்சேபனைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வரி உயர்வுக்கு எதி ரான பதாகைககளை காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தற்போது நடைமுறை யில் உள்ள தெருக்கட்டணத்தோடு, தற்போது உயர்த்தப்பட்ட காரணி யால் பெருக்கி வரியை கணக்கிட வேண்டும். பழைய மாநகராட்சி பகுதி களில் 600 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கு 1.50 (1.25) காரணி யும், 601-1200சதுர அடியிலான குடி யிருப்பு கட்டிடத்திற்கு 1.75 (1.50) காரணியும், 1201-1800 சதுர அடி யிலான குடியிருப்பு கட்டிடத்திற்கு 2.00 (1.75) காரணியும்,1801 சதுர அடி முதல் 2.50 (2.00) காரணி யும் உயர்த்தப்படுகிறது. (மாநகராட்சி யுடன் 2011ம் ஆண்டு இணைக்கப் பட்ட பகுதிகளுக்கான காரணிகள்) தொழிற்சாலைகளுக்கு 2.00 (1.75) காரணியும், குடியிருப்பு அல்லாத பகுதிக்கு 2.50 (2.00) காரணி யும், அரசு நிதியதவி பெறும், தனி யார் கல்வி நிறுவனங்களுக்கு 2.00 (1.75) காரணியும், சிறப்பு வகை கட்டிடங்களுக்கு குடியிருப்பு அல்லாத பகுதிக்கு இணையாகவும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் சில்லரை விற்பனையில் கொள்முதல் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்திட மிருந்து பெட்ரோல் டீசலை மாநகராட்சி மொத்த கொள்முதல் விலைக்கு கொள்முதல் செய்து வந்தது. தற்போது ஒன்றிய அரசின் எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் வழங்குவதில் இரட்டிடை விலை கொள்கையை கடைபிடிக் கின்றன. இதன்படி மொத்த கொள்முதல் செய்யும் போது பெட்ரோலுக்கு 112.36 ரூபாய் எனவும், சில்லரை விற்பனை விலை 110.85 ரூபாய் எனவும் நிர்ணயிக்கின்றனர். அதேபோன்று டீசல் மொத்த கொள்முதலுக்கு 117.34 எனவும், சில்லரை விற்பனை விலை 91.43 ரூபாய் எனவும் விலை நிர்ணயித்துள்ளனர். இதனால் ஏற்படும் நிதி இழப்பை சரி செய்ய இனி சில்லறை விற்பனை விலைக்கு பெட்ரோல் டீசல் கொள்முதல் செய்வ தற்கான தீர்மானமும் நிறைவேற்றப் பட்டது.