கோவை, ஆக.17- கோவை மாநகராட்சியின் அநி யாய சொத்து வரி உயர்வு மற்றும் சூயஸ் குடிநீர் விநியோகம் ஆகி யவற்றிற்கு அனைத்து கட்சிகள் கூட்டம் கண்டனம் தெரிவித்துள் ளது. மேலும், அனைத்து தரப்பு மக்களையும் இணைத்து தொடர் போராட்டம் நடத்தவும் முடிவெடுக் கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட அனைத்து கட்சி மாவட்ட நிர்வாகிகள் மற் றும் அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சனியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு அலுவலகத்தில் நடை பெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலை மையில் நடைபெற்ற இக்கூட்டத் தில் திமுக அவைத் தலைவர் நாச்சி முத்து, காங்கிரஸ் கட்சியின் மாந கர பொருப்பாளர் கணபதி சிவக் குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி. இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப் பினர் சி.பத்மபநான், மதிமுக மாவட் டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார், சேதுபதி, கிருஷ்ணசாமி, சிபிஐ மாவட்ட செயலாளர் வி. எஸ்.சுந்தரம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.ஆறுமுகம், தேவ ராஜ், சிவசாமி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் செயலாளர்கள் தனபால், ராதாகிருஷ்ணன், ரமேஷ், வடிவேல், தபெதிக நிர் வாகி ஜீவானந்தம், ஆம் ஆத்மி கட்சியின் ஆண்டனி சார்லஸ், விடு தலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வா கிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், கோவை மாநக ராட்சி விதித்துள்ள அநியாய சொத்துவரி உயர்வு மற்றும் கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோக உரிமையை பன்னாட்டு சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கியது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் வருமாறு, மாநில அரசின் ஆணையை சொல்லி கோவை மாநகராட்சி நிர்வாகம் குடியி ருப்பு வீடுகளுக்கு 50 சதவிகித மும், குடியிருப்பு அல்லாத அனைத் துவகை கட்டிடங்களுக்கும், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு 100 சதவிகிதமும் என வரியை உயர்த்தியுள்ளது. இத்துடன் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வரி உயர்வு அமலாக்கப்படுவதாக கூறி நிலுவை தொகையை வசூலிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி நிர் வாகம் இறங்கியுள்ளது. தொழில் நெருக்கடி, நிரந்தர வேலையின்மை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கோவை மாநகர மக்கள், வியாபாரிகள், சிறு குறு தொழில் முனைவோர்கள், வாடகை வீட்டு உரிமையாளர்கள், பெரும் தொழில்நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்தும் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளன.
கோவை நகராட்சி துவங்கி மாநாகராட்சி வரையிலான 150 ஆண்டுகால வரலாற்றில், 50 சதவி கிதம், 100 சதவிகிதம் வரி உயர்வு என்பது எப்போதும் தீர்மானிக்கப் பட்டதில்லை. எனவே, புதிய மாமன் றம் அமைத்து, மக்கள் பிரதிநிகள் மன்றம் தீர்மானிக்கும் வரை கோவை மாநகராட்சி நிர்வாகம் சொத்துவரி உயர்வு அரசாணையை நடைமுறைப்படுத்தக்கூடாது. ரத்து செய்ய வேண்டும் எனவும் இந்த அனைத்து கட்சி கூட்டம் மாநக ராட்சி நிர்வாகத்தையும், மாநில அரசையும் கேட்டுக்கொள்கிறது. மேலும், கோவையின் குடிநீர் ஆதாரம் முழுவதையும் பன்னாட்டு நிறுவனமான பிரான்ஸ் நாட்டு சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப் பட்ட மாநகராட்சி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து சொல்பவர்களை கைது செய்து அச்சுறுத்தும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். கைது செய்யப்பட்ட வரை எந்த நிபந்தனையும் இல்லா மல் விடுதலை செய்யப்பட வேண் டும் என இக்கூட்டம் வலியுறுத்து கிறது. மேலும் மாநகராட்சியின் வரி உயர்வு சம்பந்தமாக 100 வட்டங் களில் அனைத்து கட்சி நிர்வாகிகள், குடியிருப்பு சங்க நிர்வாகிகள் கலந் தாய்வு கூட்டத்தை இம்மாத இறு திக்குள் நடத்துவது, மற்றும் அனைத்து கட்சி, சிறு குறு தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், பெரு தொழில் நிறுவனங்களின் கூட்ட மைப்பின் நிர்வாகிகள், நில விற் பனை உரிமையாளர் சங்க நிர்வா கிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகி கள் பங்கேற்கும் கூட்டத்தை செப் டம்பர் முதல் வாரத்தில் நடத்துவது. இந்த கூட்டத்தில் தொடர்ச்சியாக நடத்த இருக்கிற இயக்கங்கள் குறித்து முடிவெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவை மாநகராட் சியின் சொத்துவரி உயர்வு, சூயஸ் பன்னாட்டு நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமை ஆகியவற்றை கண்டித்து வலுவான போராட்டத்தை மக் களை திரட்டி நடத்துவது என அனைத்து எதிர்க்கட்சிகள் பங் கேற்ற இந்த கூட்டத்தில் முடிவெடுக் கப்பட்டுள்ளது. சமீபகாலமாக மக் களின் ஜனநாயக ரீதியான போராட் டங்களுக்கு காவல்துறை கடுமை யான கெடுபிடிகளை நடத்துகிறது. மேலும், முறையாக அனுமதிபெற்று போராட்டம் நடத்த உத்தேசிக்கப் பட்ட இடங்களில் கூட அனுமதி மறுக்கப்படுவது ஏற்க முடியாது. தனியார் தொலைக்காட்சி சார் பில் புதிய கல்வி கொள்கை குறித்து விவாத நிகழ்ச்சியை அரங்கிற் குள் நடத்த ஏற்பாடு செய்யப்பட் டது. காவல்துறையினரின் அனுமதி பெற்று அரங்கத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி இறுதி நேரத் தில் காவல்துறையினர் ரத்து செய்துள்ளனர். இதேபோல் சனி யன்று (ஆக.17) குடிசைப்பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக் கையை கண்டித்து காந்திபார்க்கில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்கனவே காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று ஏற்பாடு செய்யப் பட்டும், தற்போது காவல்துறையி னர் நடத்தக்கூடாது என உத்தர விட்டுள்ளனர். இதனையும் மீறி இந்த போராட்டம் நடத்த உள் ளோம். ஆகையால் தொடர்ச்சி யான இந்த போக்கினை காவல் துறையினர் கைவிட வேண்டும். ஜனநாயக ரீதியான போராட்டங் களை ஒடுக்கும் நடவடிக்கையை ஒருபோதும் ஏற்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.