சட்டமேதை அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய கோரி திங்களன்று (டிச.23) புதுப்பெருங்களத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாம்பரம் பகுதிக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வி.பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.விஜயா உள்ளிட்டோர் பேசினர்.