districts

சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரியை மூட கோரிக்கை

மதுராந்தகம், பிப்.15- ஜமீன்எண்டத்தூரில் பொது மக்களுக்கு இடையூராகவும் சட்ட விரோதமாக  செயல்பட்டுவரும் கல்குவாரியை முழுமையாக மூட வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மது ராந்தகம் ஒன்றியம் ஜமீன் எண்டத்தூரில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரியில் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்பட்டு உயிர்ச்சேதம் ஏற்பட்டு வரு கிறது. அப்பகுதியில் உள்ள பொன்னி யம்மன், சேரிஅம்மன், சிவன் கோவில் ஆகியவற்றிற்கு பக்தர்கள் செல்ல முடியாமலும், 300 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்களில் பயிர் செய்ய முடியாமலும் பொது மக்களும் விவசாயிகளும் சிரமப்  பட்டு வருகின்றனர். கல்குவாரியில் பாறைகளை உடைப்பதற்கு அதிக சத்தத்துடன் வெடிபொருட்கள் வெடிக்கும் போது அருகாமையில் உள்ள வீடுகள் மற்றும் அரசு மருத்துவமனை கட்டடம் விரிசல் ஏற்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் செவ்வாயன்று (பிப்.14) ஜமீன் எண்டத்தூர் பகுதியைச் சார்ந்த இருவர் இரு சககர வாகனத்தில் பயணம் செய்த போது கல்குவாரி லாரி மோதிய தில் படுகாயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் லாரிகளை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவல் அறிந்து வந்த சித்தா மூர் காவல்துறையினர் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இத்தவல் அறிந்து புதனன்று (பிப்.15) ஜமீன் எண்டத்தூர்  கிராமத்திற்கு சென்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.வாசுதேவன், மதுராந்தகம் வட்டத் தலைவர் ஜெகநாதன், மார்க்சிஸ்ட் கட்சி யின் மதுராந்தகம் வட்டச் செய லாளர் எஸ்.ராஜா ஆகியோர் பாதிக்கப்பட்டு வரும் கிராம மக்களை சந்தித்து விவரங்களை கேட்டறிந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.வாசுதேவனிடம் கேட்டபோது,  தொடர்ந்து இப்பகுதியில் கல்கு வாரி லாரிகளால் விபத்து ஏற்பட்டு வருகிறது மேலும் அர சின் அனுமதியையும் மீறி கல்கு வாரி நடைபெற்று வருவதால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விரைவில் கிராமமக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகி றோம். பாதிக்கப்பட்ட மக்களி டம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தி உரிய அலுவலர்களிடம் கொடுத்துள்ள தாக கூறினார்.