ராணிப்பேட்டை, டிச.14 - புயல்-மழையால் நெமிலி ஒன்றியத்தில் குடிசைகளை இழந்த பழங்குடி இருளர் இன மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. மாண்டஸ் புயலால் ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டம், கணபதிபுரம் ஊராட்சிக்குட்பட்ட நெமிலி ஒன்றி யத்தில் வசிக்கும் 21 பழங்குடி இருளர் இன குடும்பங்களின் குடிசைக்குள் தண்ணீர் புகுந்து, இடிந்து சேதமானது. இதனால், அந்த மக்கள் கணபதிபுரம் அரசுப் பள்ளியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்த மக்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரக்கோணம் தாலுகா செயலாளர் ஆ.சீனிவாசன், கிராம நிர்வாக அதிகாரி உமா, வருவாய் ஆய்வாளர் விநாயகம் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரை தொடர்பு கொண்டார். அப்போது, 16 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா தயாராக உள்ளது என்றும் மீதமுள்ள 5 குடும்பங்களுக்கு சான்றிதழ் சரிப்பார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும், விரைவில் பட்டா வழங்குவதாகவும் உறுதிய ளித்தனர். அம்பரேஷ்புரம் ஊராட்சி மன்றத் தலைவரும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளருமான எஸ். வேலு, ஜெயமாலினி, சிறுபான்மை நலக்குழு மாவட்டச் செயலாளர் ரபீக் அகமது, மாவட்டத் தலைவர் சையத் தாஜ் பிரான், சண்முகம், வடிவேலு, நாகராஜன், திருவள்ளூர் மாவட்டம் எம். சின்னராசு ஆகி யோர் உடனிருந்தனர்.