districts

img

முண்டியம்பாக்கம் பகுதியில் சிபிஎம் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம், மார்ச் 31- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின்  திமுக வேட்பாளர் நா. புகழேந்தியை ஆதரித்து விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். முண்டியம்பாக்கம் பகுதியில் வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர்  வி.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கி னார். பொதுமக்களிடம் உதயசூரியன் சின்  னத்திற்கு வாக்கு சேகரிப்பில் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் வி.ராதா கிருஷ்ணன், எஸ்.முத்துகுமரன், மாவட்ட குழு  உறுப்பினர் ஏ.கிருஷ்ணமூர்த்தி,ஒன்றிய குழு  உறுப்பினர் எஸ்.ரமேஷ், கிளை செயலாளர் பூபாலன் உட்பட பெண்கள் ஆண்கள் திரளாக கலந்து கொண்டு வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.