வேலூர், டிச.24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒருங்கி ணைந்த வேலூர் மாவட்டக்குழு உறுப்பினர், திருப்பத்தூர் தாலுகா முன்னாள் செயலாளர் தோழர் டி.ஜாபர் சாதிக் (வயது 67) உடல்நலக்குறைவால் செவ்வாயன்று (டிச.24) கால மானார். ஜாபர்சாதிக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிபிஎம் வேலூர்-திருப்பத்தூர் மாவட்டக்குழு சார்பில் திருப்பத்தூர் புதுப்பேட்டை சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து கோட்டை பகுதியில் உள்ள அவரது இல்லம்வரை மவுன ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தாலுகா செயலாளர் எஸ்.காமராஜ் தலைமை தாங்கினார். இரங்கல் நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தயாநிதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.காத்தவ ராயன், எஸ்.ஜோதி, குபேந்திரன், முருகானந்தம், சிவாஜி (பால் உற்பத்தியாளர் சங்கம்) , தாலுகா குழு உறுப்பி னர்கள் கேசவன், வீரமணி, ஆனந்தன், ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த மாதம் வேலூர் மாவட்ட மாநாட்டு பேரணியை துவக்கி வைத்தவர் என்பதும் 2011-16 வரை திருப்பத்தூர் நகரமன்ற உறுப்பினராக திறம்பட பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவருக்கு மக்புல் ஜான் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.