districts

மருத்துவரை தாக்கிய ஆய்வாளரை கைது செய்ய சிபிஎம் கோரிக்கை

புதுச்சேரி, செப்.13- மருத்துவரை தாக்கிய காவல் ஆய்வா ளர் சண்முகசுந்தரத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம்  வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்ப தாவது- புதுச்சேரி போக்குவரத்து காவல் பிரிவில்  ஆய்வாளராக பணிபுரியக்கூடிய சண்முக சுந்தரம், தனக்கு உள்ள அரசியல் செல் வாக்கை பயன்படுத்திக்கொண்டு பலரை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது . கடந்த  1 .10. 2020 இல்  அரசு பொது மருத்துவமனை யில்  மாலை நேரத்தில்  புகுந்து அங்கு பணி யில் இருந்த  பெண் செவிலியரின் கையை  முறுக்கி  ஆடையை கிழித்து தாக்குதல் நடத்தி யுள்ளார். தடுக்க முற்பட்ட ஊழியர்களையும், மருத்துவர்களையும் சரமாரியாக தாக்கிய தாக கூறப்படுகிறது. மருத்துவ பணியாளர்கள்  தங்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித்  தாக்குதலுக்கு நியாயம் கேட்டும் ஆய்வாளர்  மீது தகுந்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்  என வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தி னர். இதையொட்டி  காவல்துறை உயர் அதி காரிகள் ஆய்வாளர் சண்முகசுந்தரத்தின் மீது  நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் அரசி யல் அழுத்தம் காரணமாக  மேற்படி நபர் மீது  உரியநடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத்  தெரிய வருகிறது. தவறு செய்தவர் காவல்  துறை அதிகாரி என்பதால் மருத்துவ பணி யாளர்கள் மற்றும் மருத்துவர் தாக்கப்பட்ட  சம்பவத்தை பூசி மெழுகி, மூடிமறைத்துள்ள னர். இதேபோன்று குற்ற சம்பவங்களில் வேறு  ஒருவர் ஈடுபட்டால் இது போன்ற மென்மை யான அணுகுமுறையை காவல்துறை கடைப்பிடிக்குமா?. என்ற கேள்வி எழுந்துள் ளது. பொதுவெளியில் தரம் தாழ்ந்து நடந்து கொள்ளும் இந்த நபருக்கு வசதியாக  போக்குவரத்து காவல் பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  தற்போதும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை  ஆபாசமாக திட்டுவது, மிரட்டுவது  போன்ற இவரது நடவடிக்கை வாடிக்கையாக இருந்து வருகிறது.

            புதுச்சேரிக்கு வருகைதந்த குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு வருகை யையொட்டி மிஷின் வீதி பகுதியில்  பணியின்  போது அப்பகுதியில் இருந்த  பல தள்ளு வண்டி களை தலைகீழாக தள்ளிவிட்டு பொது மக்களிடம்  தகராறு செய்து காவல்துறைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக செயல் பட்டுள்ளார்.  அப்பகுதியில் இருந்த சிறு வணி கர் ஒருவரிடம்  அத்துமீறி நடந்து கொண்டுள்  ளார். அதனைத் தட்டிக் கேட்ட புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் பணியாற்ற கூடிய  மருத்துவரையும் சட்டையை கிழித்து கடுமையாக தாக்கியுள்ளார் . அரசு உயர் பொறுப்பில்  உள்ளவர்களிடம்   இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளும் இவர் பொது மக்களிடம் எப்படி நடந்துகொள்வார் என்ப தற்கு சான்று  தேவையில்லை.

    தொடர்ச்சி யாக அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகார  போதையில் இதுபோன்ற அராஜக நட வடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஆய்வாளர் சண்முகசுந்தரம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மருத்துவர்கள் பணி பாது காப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு  செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த ஆண்டு அரசு பொது மருத்துவ மனை மருத்துவர் மற்றும் செவிலியர் தாக்கப்  பட்ட வழக்கில் அவர் மீது மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி  காவல்துறை விளக்கம் அளிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்  கொள்வதோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க புதுச்சேரி அரசு தகுந்த நடவடிக்கை மேற்  கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கி றது.  இவ்வாறு அந்த அறிக்கையில்  ராஜாங் கம் அறிக்கையில் கூறியுள்ளார்.