districts

மாநகராட்சியாக மாறும் கடலூருக்கு அடிப்படை வசதி வேண்டும்

கடலூர் ஆட்சியருக்கு சிபிஎம் கோரிக்கை

கடலூர், செப். 8- மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கடலூருக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம், ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி யிருப்பதாவது: கடலூர் நகராட்சியை மாநகராட்சியாகவும், வடலூர், திட்டக்குடி பேரூராட்சிகளை நகராட்சியாக தரம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. கடலூர் மாநகராட்சியுடன் இணைய உள்ள ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம ஊராட்சியில் தற்போது நடைபெற்று வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் தொடர்ந்து  நடைபெற உத்தரவிட வேண்டும்.

நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் வரி கடுமையாக உயரும் என்ற மக்களின் அச்சத்தை  போக்க வேண்டும். கடலூரில் 60 விழுக்காடு மக்கள் குடிநீரை காசு கொடுத்து  வாங்கும் நிலை உள்ளது. நகராட்சி வழங்கும் தண்ணீர் கலங்க ளாக உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குடிநீர்  குழாய், உடைந்து சாக்கடை நீர் கலக்கும் அபாயம்  உள்ளது.  ஆகவே, அவற்றை சீரமைத்து சுத்தமான தண்ணீர் இரண்டு  வேளையும் வழங்க வேண்டும். கடலூரில் மருத்துவ கல்லூரி அமைக்க 2010ல் தற்போதைய முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். எனவே, அனைத்து பிரிவுகளையும் கொண்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக அமைக்க வேண்டும். கடலூரில் புதைவட மின் திட்ட பணிகள் நடைபெறுவ தால் அனைத்து சாலைகளும் பராமரிப்பின்றி குண்டும் குழியு மாக உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க புறவழிச் சாலை திட்டத்தை அமலாக்க வேண்டும்.

நகராட்சி ஊராட்சி பகுதிகளை மாநகராட்சியாக மாற்றும்  நிலையில், அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்த வேண்டும். நகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். கடலூரில் அரசு சட்டக் கல்லூரி, அரசு மகளிர் கல்லூரி,  அரசு பொறியியல் கல்லூரி ஆகியவற்றை உருவாக்க வேண்டும். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும்  திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட கெடிலம் ஆற்றில் நெல்லிக்குப்பம் ஆலைக் கழிவுநீர், உப்பனாற்றில் கலப்பதை  தடுத்திட வேண்டும். நகர்ப்புர மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க சரியான திட்டமிடல் வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.