districts

img

பாலாறு வரத்து கால்வாய்களை தூர் வாருக! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை, மார்ச் 27 - பாலாறு நீர்வரத்துக் கால்வாய்களை தூர்வார வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட பேரவைக் கூட்டம் மாவட்டத் தலைவர் எல்.சி.மணி தலைமையில் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.டில்லி பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராணி ப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் என்.காசி நாதன், விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கி ணைந்த வேலூர் மாவட்டச் செயலாளர் சக்தி வேல் உள்ளிட்டோர் பேசினர். பேரவையில், உயர் மின்னழுத்த கோபு ரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், மாத வாடகையும் வழங்க வேண்டும், நவ்லாக் பண்ணைத் தொழிலாளர்களுக்கு முறையாக மாதா மாதம் ஊதியம் வழங்க வேண்டும், ஏப்.1 வரை உள்ள அரியர்ஸை உடனடியாக வழங்க வேண்டும், வருவாய் கிராமங்களில் நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பேரவையில், மாவட்டத் தலைவராக எஸ்.கிட்டு, செயலாளராக எல்.சி.மணி, பொருளா ளராக ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 13 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப் பட்டது.