விருகம்பாக்கம் பகுதி, அன்னை சத்யா நகரில் சென்னை மற்றும் புறநகர் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை புதனன்று (பிப்.2) சிஐடியு தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் க.பீம்ராவ் இயக்கி வைத்தார். இந்நிகழ்வில் சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயாளர் ஏ.நடராஜன், சிபிஎம் பகுதிச் செயலாளர் இ.ரவி, நிர்வாகிகள் டி.ஆறுமுகம், எஸ்.கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.