போரூர், ஜூன் 29- சென்னை அசோக் நகரில் இருந்து வடபழனி நோக்கி 100 அடி சாலையில் செவ்வாயன்று (ஜூன் 28) நள்ளிரவு அளவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானது. அதிவேகமாக சென்ற கார் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி சாலை யில் தலைகுப்புற கவிழ்ந் தது. இதில் மோட்டார் சைக் கிளில் வந்த மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கிஷோர் குமாரின் கால் முறிந்து படுகாயம் அடைந்தார். மேலும் காருக்குள் சிக்கிய வாலிபரையும் காயத்துடன் மீட்டனர்.