districts

img

திருவள்ளூர் நகராட்சியில் பிரச்சாரம்

திருவள்ளூர் நகராட்சி 4-வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.உதய நிலா வீதி வீதியாக வாக்கு கேட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக புதனன்று ( பிப். 8) விக்னேஷ் நகரில்  ஆதரவு கோரினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், ஆர்.தமிழ் அரசு, இ.மோகனா, தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.