districts

போலி ஆவணம் மூலம் ரெம்டெசிவிர் மருந்து பெற முயற்சி

சென்னை, மே 11- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு கவுண்ட்டர் அமைக்கப்பட்டு, ரெம்டெசி விர் மருந்து வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு திரள்கின்றனர். கொரோனா நோயாளிகளுக்கு பரிந்து ரைக்கப்பட்ட ‘ரெம்டெசிவிர்’ மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு, தமிழக அரசு,  தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்து, உரிய ஆவணங்க ளுடன் வருபவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்தை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது. அதன்படி முதன்முதலாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு கவுண்ட்டர்  அமைக்கப்பட்டு, ரெம்டெசிவிர் மருந்து வினி யோகம் தொடங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு திரள்கின்றனர். செவ்வாயன்றும் ரெம்டெசிவிர் மருந்து வாங்க சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் மக்கள்  கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்ப டுத்த காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை போலி ஆவணம் காட்டி பெற முயற்சி செய்த தாக மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதி யைச் சேர்ந்த சதிஷ், மாதவரத்தைச் சேர்ந்த  செல்வகுமார், அயனாவரத்தைச் சேர்ந்த கிரிஸ்டி பால் ஆகிய 3 பேரை பிடித்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர். மேலும் உயிரிழந்த நோயாளிகளின்  பெயரில் பரிந்துரை சீட்டு இருந்ததாக காவல்  துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.