கிருஷ்ணகிரி, ஜூலை 6-
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கடந்த 3 ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு, அரசு கலைக் கல்லூரி பி.ஏ., வரலாறு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 60 பேருக்கு தொல்லியல் குறித்த உள்ள விளக்க பயிற்சி நடந்து வருகிறது.
மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் பயிற்சி அளித்து வருகிறார். அருங்காட்சி யகத்திலுள்ள சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று படி எடுத்து, படித்து பொருள் கொள்வது எப்படி என்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
முன்னதாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம், இடை வரலாற்றுக் காலம் மற்றும் வரலாற்று காலங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.