சென்னை, அக். 15- அன்லோன் அழகு கலை நிலையம் 2.0 இரண்டாவது கிளை சென்னை கோட்டூர்புரத்தில் திறக்கப்பட்டுள்ளது. இதனை தோல் மற்றும் அழகியல் மருத்துவர் டாக்டர். நிஷா ஆர். ஸ்ரீனிவாஸ், சிகையலங்கார நிபுணர் டுவைன் அப்பு வெய்ன் ஆகியோர் திறந்துவைத்தனர். சென்னையில் அழகுக்கலை துறையில் புகழ்பெற்ற நிறுவனமான அன்லோன் ஆர்ட் சலூன் , சென்னை கோட்டூர்புரத்தில் 8,000 சதுர அடி பரப்பளவில் அதன் இரண்டாவது கிளையை அமைத்துள்ளது. , பிரம்மாண்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைந்துள்ள அழகு கலை நிலையத்தில், உலகத்தரமான சிகை அலங்காரம் மற்றும் தேக பராமரிப்பு, நகம் பராமரிப்பு, உள்ளிட்ட சேவைகள் கிடைக்கும். சென்னையின் முன்னோடி மருத்துவ-சலூனாக இது விளங்குகிறது. துவக்க நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் ரஞ்சித் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.