திருவள்ளூர், ஆக. 6- பழங்குடி இருளர் இன மக்களுக்கு கொரோனா சிறப்பு நிதி உதவி தொகுப்பு வழங்குவதில் ஏற்பட்ட முறைகேடுகளை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங் கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஆக. 6) பொன் னேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப் பூண்டி, சோழவரம், மீஞ்சூர், கடம்பத்தூர் ஆகிய நான்கு ஒன்றியங்களில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் கொரோனா கால சிறப்பு நிவாரண நிதி ஒதுக்கப்பட்டது. ஒதுக்கப்பட்ட நிதி பழங்குடி இருளர் இன மக்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், அந்த நிதி மற்ற பிரிவினருக்கு வழங்கப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. மேலும் நான்கு ஒன்றி யங்களிலும் கொரோனா சிறப்பு நிதி வழங்கிட நலிந்தோர் பட்டியலில் பழங்குடி இரு ளர் இன மக்களை சேர்க்கவும், வாழ்வா தாரம் இன்றி வறுமையின் விளிம்பில் வாழும் பழங்குடி இருளர் இன மக்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் விவரம் மாவட்ட நிர்வாகத்தி டம் கொடுத்தும் நிதி வழங்கப்படவில்லை என்றும், இவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை மற்ற பிரிவினருக்கு வழங்கி விட்டு, அதை பழங்குடியின மக்களுக்கு வழங்கிய தாக முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ள தாகவும் சங்க நிர்வாகிகள் குற்றம் சாட்டு கின்றனர். முற்றுகைப்போராட்டம் இந்நிலையில் கொரோனா நிதி வழங்கப் பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்,
முறையாக இருளர் இன மக்களுக்கு கொரோனா சிறப்பு நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகில் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் ஊர்வலமாக சென்று தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவல கத்தை முற்றுகையிட்டனர். அங்குள்ள அதி காரிகள் உரிய பதில் அளிக்கவில்லை என்றும், அடுத்தகட்டமாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட் டம் நடைபெறும் என நிர்வாகிகள் எச்சரித்த னர். இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.கருணாமூர்த்தி, வி.சிவகாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ்.கோபால், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அ.து.கோதண்டன், துணைச் செயலாளர் இ.தவ மணி, சிஐடியு மாவட்ட நிர்வாகி எஸ்.எம்.அனீப், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒன்றியச் செயலாளர் எஸ்.இ.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.