districts

மாங்காடு அருகே 2 வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் நகை கொள்ளை

அம்பத்தூர், ஜூன் 28- மாங்காடு அருகே உள்ள மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (31). இவர் கடந்த சனிக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு  குடும்பத்துடன் வெளியூர் சென்றார். அங்கிருந்து தினேஷ், ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின்  கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 23 சவரன் நகை  கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தார். அதேபோல் தினேஷ் வீட்டின் அருகே வசிப்பவர் மென்பொருள் பொறியாளர் அப்துல்ஜாவித். இவர் ஞாயிற்றுக்  கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு கேளம்பாக்கம் சென்றார்.  அங்கிருந்து இரவு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின்  கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 5 சவரன் நகை  கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். தினேஷ் வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் வசிப்ப வர் கல்லூரி பேராசிரியர் நாகராஜன் (50). இவர் ஒரு மாதத்  துக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு, தனது சொந்த ஊருக்குச் சென்றார். அங்கிருந்து அவர், ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டை  உடைத்து, திருட்டு முயற்சி நடந்திருப்பது நாகராஜனுக்கு தெரியவந்தது. இதில் வீட்டில் விலை உயர்ந்த ஒரு பொருட்கள் எதுவும்  கிடைக்காததினால், வீட்டின் வளாகத்தில் நிறுத்தியிருந்த நாக ராஜனின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றி ருப்பது தெரியவந்தது. இந்த 3 சம்பவங்கள் குறித்து மாங்காடு  காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.