செங்கல்பட்டு, ஜன. 18- தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லங்களை ஓய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் ஆய்வு செய்ய வேண்டும் என செங்கல்பட்டில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கடந்த டிச.30 அன்று கோகுல் ஸ்ரீ (17) சிறுவன் காவலர்க ளால் அடித்து சித்திரைவதை செய்து கொலை செயயப்பட்டான். இது சம்பந்த மாக சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் பணிபுரியும் காவலர்கள் 6 பேரை கைதுசெய்து சிறையில் அடைக்கப் பட்டனர். மேலும் சாட்சியை மறைப்பத தற்காகவும், புகாரை திரும்ப பெற நிர்ப்பந்தம்செய்தும், கொலை யான சிறுவனின் தாயாரை கடத்தி வைத்து மிரட்டிய செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் மற்றும் இவருக்கு துணைபுரிந்தவர்கள் மீதும் வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் செங்கல்பட்டில் புதனன்று (ஜன.18) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடை பெற்றது. திமுக நிர்வாகி இ.ராஜி வரவேற் றார். காவல் சித்திரவாதைக்கு எதிரான கூட்டுஇயக்கத்தின் நிர்வாகி இ.ஆசிர் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். மதிமுக நிர்வாகி கே.பி.ராமலிங்கம், அமமுக நிர்வாகி யூனுஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் இ.சங்கர் ஆகியோர் தீர்மானங் களை முன்மொழிந்து பேசினர். இக்கூட்டத்தில் காவல் சித்திர வதைக்கு எதிரான கூட்டியக்கம், திமுக, மதிமுக, சிபிஎம், காங்கிரஸ், விசிக, திக, மமக, தமிழின உணர்வாளர்கள் கூட்ட மைப்பு, மக்கள் தமிழகம் கட்சி, தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு, குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு, தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் கண்காணிப்பகம், அறக்கட்டளை மக்கள் கண்காணிப் பகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு கள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
சிறுவன் கோகுல்ஸ்ஸ்ரீ படு கொலைக்குப் பின்பு இணை இயக்குநர் கொடுத்த விசாரணை அறிக்கையை மறைத்து குற்றத்தில் ஈடுபட்டவர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்பட்ட சமூகநலத்துறையின் இயக்குநர் வளர்மதியின் செயல்பாட்டை அனைத்துக்கட்சி சார்பில் வன்மை யாக கண்டிப்பதுடன். அவர் மீது அரசு துறைவாரி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளை பாதுகாப்பதற் காக உயர்மட்ட அலுவலர்கள், மறை முகமாக தலையீடு செய்து வருகின்ற னர். இதனால் வழக்கு அதிகாரம் படைத்தவர்களால் நீர்த்துப் போகச் செய்ய வாய்ப்புள்ளது. எனவே மாநில அரசு இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு ஒதுக்கீட்டில் குடியிருக்க வீடும், சிறுவனின் தாய்க்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து கட்சிகள் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பது என்றும் செங்கல்பட்டில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் ஜனவரி 21 அன்று அனைத்து கட்சிகளின் சார்பில் நடத்துவதெனவும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.