districts

img

சொத்து அடமானம் பிரச்சனை பெண் மீது கொலைவெறித் தாக்குதல் நடவடிக்கை கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியலூர், பிப்.25 - அரியலூர் மாவட்டம் விளந்தை வானிய  தெருவில் வசிக்கும் சாந்தினியின் கணவர்  சுந்தரமூர்த்தியிடம் விளந்தை கிராமத்தை சேர்ந்த நித்தியதாசன் என்பவர் 2004 ஆம்  ஆண்டு அடமானத்திற்காக சொத்தை எழுதிக்  கொடுத்துள்ளார். இந்த சொத்தை மறு போலி  கிரையம் பெற்ற கல்லாத்தூரைச் சேர்ந்த  கணேசன் வாங்கிய கிரையத்தை தமிழக  அரசு ரத்து செய்ய வேண்டும். இரண்டாவது  கிரையம் பெற்ற கணேசனுக்கும், சுந்தர மூர்த்தியின் மனைவி சாந்தினிக்கும் சிவில் வழக்கு நடக்கும் போதே, கணேசன் அடியாட் களை வைத்து சாந்தினி மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தியும், வீட்டை அடித்து  நொறுக்கியும், சேதப்படுத்தியும் உள்ளனர். இதில் ஈடுபட்ட அடியாட்கள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. சாந்தினி மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காத ஆண்டிமடம் போலீசாரை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆண்டிமடம் நால்ரோட்டில் மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.மீனா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  பெரம்பலூர் மாவட்ட துணைத் தலை வர் கலையரசி, மாதர் சங்க மாவட்ட செயலா ளர் பி.பத்மாவதி, மாவட்ட தலைவர் எஸ்.பாக்கியம், சிபிஎம் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே.மகாராசன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மலர்கொடி, ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம். வெங்கடாசலம், சிபிஎம் ஆண்டிமடம் ஒன்றிய  செயலாளர் வி.பரமசிவம் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.வசந்தா, ஆர்.மகேஸ்வரி, சிபிஎம் பெரம்பலூர் நகர செயலாளர் ஆர்.இளவரசன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.அருணாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.