அரியலூர், அக்.21 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் அருகே உள்ள கோடாலிக்கருப்பூர் கிராமத் தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 7 கண் மதகில் உடைப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன், துறை அமைச்சரிடம் உடனடியாக மதகை சரி செய்ய வேண்டும் என மனு அளித்தார். மேலும், கோடாலி கருப்பூர் 7 கண் மதகு சரிசெய்யப்படுமா என சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து மதகு சரி செய்யப்பட்டு வருகிறது. பின்னர், ஜெயங்கொண்டம் வந்த எம்எல்ஏ கண்ணன், கோடாலி கருப்பூர் கிராமத்திற்கு சென்று மதகு ஷட்டர் சரி செய்யும் பணியை பார்வை யிட்டார். பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் விரைவில் பணியை முடிக்கவும், புதிய கத வணையுடன் பாலம் அமைப்பதற்கான அள வீடுகளையும், மதிப்பீடுகளையும் அளந்து தயார் செய்து விரைவில் சமர்ப்பிக்க வேண் டும் என அறிவுறுத்தினார். மேலும், பயிர் பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் விவசாய நிலங்களை பார்வை யிட்டு, தா.பழூர் ஒன்றியத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்டுள்ள 559 ஹெக்டேர் பரப்பளவு நிலங் களை ஆய்வு செய்து, சேதம் தன்மை குறித்து இழப்பீடு வழங் குவதற்கு வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்குக! இதனால் அண்ணங்காரன்பேட்டையில் வெள்ளநீர் வயல்வெளிகளில் புகுந்து நெல் பயிர் முழுவதும் மூழ்கிவிட்டது. கருப்பூர், ஆயிப்பாளையம், அண்ணங்காரன் பேட்டை, சோழமாதேவி, குடிக்காடு, தென்கச்சிபெருமாள் நத்தம் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 400-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களின் நெற்பயிர்கள் வெள்ளத் தில் மூழ்கி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இவற்றை பார்வை யிட்டு விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு கிடைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீரில் அடித்து சென்ற மாடுகளை மீட்டிடவும், பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட குழு சார்பாக மாவட்டச் செயலாளர் ஆர்.மணிவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.