அரியலூர், அக்.2- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் நகராட்சிக்குட்பட்ட கீழக் குடியிருப்பு கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை மிகவும் பழமை வாய்ந்து இடிந்து விழும் நிலை யில் உள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. தற்போது இந்த நிழற்குடையின் மேற்கூரைகளில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் ஆங்காங்கே விரிசல் விட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் தெரிவித்தும், எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பேருந்துக்காக வரும் மக்கள், இந்த நிழற்குடை கட்டிடம் இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்திலேயே வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. இதில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் என பலர் மயங்கி விழுந்த சம்ப வமும் நிகழ்ந்துள்ளது. இந்த இடிந்து விடும் நிலையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டி டம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.