அரியலூர், ஜன.19- அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட் டத்தில் காலாவதியான விதைகளை விற்பனை செய்தால் கடை உரிமையா ளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்று திருச்சி விதை ஆய்வு இயக்கு நர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘விவசாயிகள் தங்க ளுக்கு தேவையான விதைகளை வாங்கும் போது அரசினால் விதை விற்பனை உரி மம் வழங்கப்பட்ட விதை விற்பனை நிலை யங்களில் மட்டுமே தங்களுக்கு தேவை யான விதைகளை வாங்க வேண்டும். அப் படி விதைகளை வாங்கும் போது விற்ப னையாளர்களிடம் அவசியம் விற்பனை ரசீதை கேட்டு பெறவேண்டும். இதை பயிர் அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு வழங்கும் விற்பனை ரசீதில் விவசாயின் பெயர், ரகம், நிலை, குவியல் எண், காலா வதி நாள் ஆகியவற்றை ரசீதில் குறிப் பிட்டு விவசாயிடம் கையொப்பம் பெற்று விற்பனைச் செய்யவேண்டும். காவாவதியான விதைகளை விற்பனை செய்யக் கூடாது. பருவத்திற்கு ஏற்ற விதை களை விற்பனை செய்ய வேண்டும். இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால் விதை விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு திருச்சி மன்னார்புரத்திலுள்ள விதை ஆய்வு இயக்குநர் அலுவலக தொலைபேசி 0431- 2420587 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ள லாம்’’ என தெரிவித்துள்ளார்.