அரியலூர், ஏப்.21- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் பாண்டியன் எனும் ஏரி உள்ளது. இதன் மொத்த பரப்பளவு 82.12.0 ஹெக்டேர்; அதாவது 202 ஏக்கர் 83 சென்ட் நிலப்பரப்பு கொண்டது. இதனை சுற்றி பலரும் வீடு கட்டி குடியி ருந்து வருகின்றனர். இதில் தாழ்த்தப் பட்ட மக்கள் சுமார் 50 குடும்பத்தினர் கடந்த 100 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இப்பகுதி நீர்நிலைகளில் உள்ள சுமார் 22 ஆக்கிரமிப்பு வீடுகள் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை, காவல்துறை, தீய ணைப்பு துறை உதவியுடன் வியாழக் கிழமை காலை 10 மணியளவில் கங்க வடங்கநல்லூர் கிராமத்தில் அகற்றப் பட்டன. அப்போது தங்களுக்கு இடம் கொடுக்காமலேயே எங்கள் வீட்டை இடிக்க வருகிறீர்களே என ஏழை மக்கள் அழுது புலம்பினர். இவர்களின் கதறலுக்கு எந்த பயனும் இல்லை. மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ஏரி புறம்போக்கு என்று தெரிந்தும் எங்களுக்கு தொகுப்பு வீடு கொடுத்தது யார்? வீடு கட்ட அனுமதி கொடுத்தது யார்? வீட்டு வரி ரசீது கொடுத்தது யார்? குடிநீர் குழாய் இணைப்பு, மின்னிணைப்பு கொடுத்தது யார்? இவை எல்லாவற்றை யும் அரசே கொடுத்துவிட்டு தற்போது மாற்று இடம் கொடுக்காமல் இடிப்பது முறையற்ற செயலாகும் என தங்கள் ரேசன் கார்டு, ஆதார் கார்டு, வாக்கா ளர் அடையாள அட்டை உள்ளிட்ட வற்றை சாலையில் வீசி தீயிட்டுக் கொளுத்த முயற்சித்தனர். அப்போது அருகில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்து நிறுத்தினர்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வா கிகள் அதிகாரிகளிடம் தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகள் மாற்று இடம் வழங்குவ தாக தெரிவித்தனர். இதையடுத்து வீடு இழந்தவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினரின் முயற்சியால் மாற்று இடம் வழங்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி களுக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் இடிக்கப்பட்ட வீடுகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், புதிதாக வீடு கட்ட நிதி உதவி வழங்க வேண்டும். சேத மடைந்து, இழந்த பொருட்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு சிபிஎம் கோரிக்கை வைத்துள்ளது. இதில் கட்சியின் மாவட்ட செயலா ளர் இளங்கோவன், ஒன்றியச் செயலா ளர்கள் எம்.வெங்கடாச்சலம் (ஜெயங் கொண்டம்), வி.பரமசிவம் (ஆண்டி மடம் வட்டம்), ஜெ.ராதாகிருஷ்ணன் (தா.பழூர்), மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.மகாராஜன், டி.அம்பிகா, பி. பத்மாவதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், எஸ்.மீனா, தியாகராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சி.ரமேஷ் பசுபதி, கே.ராஜா மற்றும் உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணிக்காக காவல்துறையினர் ஏராள மானோர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.