districts

img

வாலிபர்கள் குடியரசு தின உறுதியேற்பு

திண்டுக்கல்,ஜன.28-   குடியரசு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்க ளின் முகமூடிகளை அணிந்து கொண்டு குடியரசு தின உறுதி மொழியேற்றனர்.  திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோட்டில் காப்பீட்டுக்கழக ஊழி யர் சம்மேளன தென் மண்டல துணைத்தலைவர் எஸ்.ஏ.டி. வாஞ்சிநாதன் தேசியக்கொடி யை ஏற்றி சிறப்புரையாற்றி னார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் கே.ஆர்.பாலாஜி, நகரச்செயலாளர் பாலமுருகன், நகரத்தலைவர் கார்த்திக், இந்திய மாணவர் சங்க சங்க மாவட்டச்செயலாளர் முகேஷ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  குஜிலியம்பாறையில் நடைபெற்ற உறுதியேற்பு நிகழ்ச்சிக்கு சரவணன் தலைமை வகித்தார். மாவட்டத்தலைவர் சிலம்பரசன் மற்றும் பலர் பங் கேற்றனர். நிலக்கோட்டையில் நடைபெற்ற உறுதியேற்பு நிகழ்ச்சிக்கு பிடல்காஸ்ட்ரோ தலைமை வகித்தார். ரெட்டி யார்சத்திரத்திலும் உறுதியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.