தஞ்சாவூர், மே.17 - மருத்துவர்கள் காலிப்பணி யிடம் விரைவில் நிரப்பப்படும் என் றார் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் கபிஸ்தலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 4,308 மருத்துவக் காலிப் பணி யிடங்களை நிரப்புவதற்கான பணி கள் நடந்து, பணி நியமனம் வழங் கப்பட்டு பணியில் சேர்ந்து வரு கின்றனர். 1,021 மருத்துவர்கள் பணிக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. 1,021 இடங்களுக்கு 25 ஆயிரம் பேர் தேர்வு எழுதி யுள்ளனர். இன்னும் பத்து நாட்க ளில் அதற்கான முடிவுகள் வெளி யாகி மருத்துவர்கள் பணியமர்த்தப் படுவார்கள். 900 பார்மசிஸ்ட் பணிக்கு 3,000 பேர் தேர்வு எழுதி யுள்ளனர். அதற்கான தேர்வு முடிவு களும் இன்னும் பத்து நாட்களில் வெளியாகும். இந்த ஆண்டு புதி யதாக 4,000 மருத்துவப் பணியா ளர்களை பணியில் அமர்த்த நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிகப் பணியாளர்கள், மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை மூலம், செவிலியர்கள் மற்றும் பல் மருத்துவர்கள் நியமிப்பதற்கான பணி நியமனங்கள் அனைத்து இடங்களிலும் முடிந்துள்ளது. கொரோனா காலத்தில் பணியாற் றிய 2,000 செவிலியர்கள் அனைத்து மாவட்டங்களிலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். பணியில் நியமிக்கப்படுவது என்பது முறை யாக நடந்து வருகிறது. தமிழ கத்தைப்பொறுத்தவரை 38 வரு வாய் மாவட்டங்களும், 45 சுகாதார மாவட்டங்களும் உள்ளன. விரை வில் கும்பகோணம், திருவள்ளூர், கடலூர் புதிய துணை சுகாதார மாவட்டங்களாக அறிவிக்கப் படும்” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களி டம் பேசிய அமைச்சர், கள்ளச்சாரா யம் குடித்து இறந்தது சட்டபூர்வ மாக இல்லாததாக இருக்கலாம். அவர்கள் குடும்பத்தின் எதிர் காலம் கருதி முதல்வர் நிவார ணம் அளித்துள்ளார். கடந்த அதி முக ஆட்சியில், எடப்பாடி பழனி சாமி முதல்வராக இருந்த போது கள்ளச்சாராய மரணத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக கொடுத்தார். ஏற்கனவே ஓ.பன் னீர்செல்வம் முதல்வராக இருந்த போதும் நிவாரணம் வழங்கியுள்ள னர். ஏன் ஜெயலலிதா கூட கள்ளச் சாராய மரணத்திற்கு நிவாரணம் அளித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில், தரும் உதவியை கொச்சைப்படுத்துவது என்பது, எதிர்க்கட்சித் தலைவர் பொறுப் புக்கு அழகானது அல்ல. கொடநாடு கொலை சம்பவமும்-எடப்பாடியும் இந்தப் பிரச்சனைக்கு முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறுகிறார்கள். அப்படியென்றால் முதல்வராக இருந்த ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம்,, எடப்பாடி பழனிசாமி போன்றவர்கள் எத் தனை முறை ராஜினாமா செய்தி ருக்க வேண்டும். கொடநாட்டில் ஐந்து கொலைகள் நடந்துள்ளது. இதற்குப் பொறுப்பேற்று எடப் பாடி பழனிசாமி ராஜினாமா ராஜி னாமா செய்து விட்டாரா? எனக் கேள்வியெழுப்பினார்.