மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர் விருதுநகர், செப்.6- திருச்சுழி அருகே பள்ளி செல்வதற்கு அரசுப் பேருந்து இன்றி தினசரி 4 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் பந்த ணேந்தல் கிராம மாணவர் கள் மாவட்ட ஆட்சியரிடம் பேருந்து வசதி கோரி முறை யீடு செய்தனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ளது பந்தணேந்தல் கிராமம். இப் பகுதியைச் சேர்ந்த மாணவர் கள் சுமார் 4 கி.மீ தொலை வில் உள்ள ஜோகில்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி யில் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி செல்லும் நேரத்தில் அரசுப் பேருந்து வசதி இல்லை. இதன் கார ணமாக, நாள்தோறும் நடந்தே பள்ளிக்கு சென்று வருகின்ற னர். மேலும், விருதுநகரில் இருந்து பந்தணேந்தல் வழி யாகச் செல்லும் அரசுப் பேருந்து காலை 10.30 மணிக் கும், மாலை 4 மணிக்கு பள்ளி அருகேயும் வந்து செல்கி றது. இதனால், ஏராளமான மாணவர்கள் பேருந்தில் பய ணம் செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும், மழைக் காலங்களில் பாடப்புத்தகங் கள் அனைத்தும் நனைந்து விடுவதாகவும் மாணவர்கள் கவலையுடன் தெரிவித்த னர். இந்நிலையில், விருது நகர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு வந்த அப்பள் ளியைச் சேர்ந்த மாணவர் கள், ஆட்சியரிடம் தங்களது கோரிக்கைகளை நேரில் தெரிவித்தனர். இதையடுத்து, ஓரிரு நாட்களில் பள்ளி நேரத்தில் அரசுப் பேருந்துகளை இயக் கிட உரிய நடவடிக்கை எடுப் பதாக மாணவர்களிடம் ஆட்சியர் உறுதியளித்தார். மேலும், மாணவர்கள் பத்தி ரமாக தங்களது சொந்த ஊருக்கு மீண்டும் செல்ல தனியார் வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார்.