திண்டுக்கல்/விருதுநகர்/சிவகங்கை, செப்.5- மோடி அரசின் மக்கள் விரோ தக் கொள்கைகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரயில் மறி யல், ஒன்றிய அரசு அலுவல கங்கள் முன்பு மறியல் நடத்த உள்ளது. இதனொரு பகுதியாக திண்டுக்கல், விருதுநகர், சிவ கங்கை மாவட்டங்களில் செப்.1-ஆம் தேதி மக்கள் சந்திப்பு-பிரச்சா ரப் பொதுக்கூட்டங்கள் நடை பெற்றுவருகிறது. திண்டுக்கல்: அடியனூத்து ஊராட்சி யானைவிழுந்தான் ஓடையில் 100 நாள் வேலை நாள் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களி டம் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் பி.வசந்தா மணி, ஒன்றியத்தலைவர் பி. பழனிச்சாமி, ஒன்றியச்செயலா ளர் வெ.அம்மையப்பன், என். பாண்டியன் (சிஐடியு), ஆகி யோர் தொழிலாளர்களிடம் துண் டுப் பிரசுரங்களை வழங்கிப் பிரச் சாரம் செய்தனர். செட்டிநாயக் கன்பட்டி ஊராட்சியிலும் பிரச்சா ரம் நடைபெற்றது. விருதுநகர்: மாவட்டம் அருப்புக்கோட்டையில் மறிய லுக்கு அழைப்பு விடுத்து பிரச்சா ரம் நடைபெற்றது. நகர் செயலா ளர் எஸ்.காத்தமுத்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.முரு கன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எஸ்.பூங்கோதை, பி. அன்புச்செல்வன், நகர்மன்ற உறுப்பினர் எஸ்.கே.பாலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர். தேனி: பெரியகுளம் நகரில் நடை பெற்ற பிரச்சாரத்தில் ஜி .சுப்பிர மணி, பி.மணிகண்டன் ஆகி யோர் தலைமையில் ஒன்பது இடங்களில் நடைபெற்ற பிரச்சா ரத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.இராமச்சந்தி ரன், எஸ்.வெண்மணி, தாலுகா செயலாளர் எம்.வி.முருகன், உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர். ஜி.கல்லுப்பட்டியில் பி.முத் தையா தலைமையிலும், குள் ளப்புரத்தில் சி.நாகராஜ் தலை மையிலும் பிரச்சாரம் நடைபெற் றது.
இராமநாதபுரம்: கீழக்கரை முஸ்லிம் பஜாரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் முஹைதீன் அப் துல் காதர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குருவேல், ராஜ்குமார், தாலுகா செயலாளர் மகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திரு உத்தரகோசமங்கையில் ம.பாலு தலைமையில் நடை பெற்ற பிரச்சாரத்தில் மாவட்டச் செயலாளர் வி.காசிநாததுரை, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் எம்.ராஜ்குமார், தாலுகா செய லாளர் மகாலிங்கம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிவகங்கை: சிவகங்கை மாவட் டத்தில் 100 இடங்களில் மறியலை விளக்கி பிரச்சாரம் நடைபெற றது. மானாமதுரை ஒன்றியத் தில் 20-மையங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. பனிக்கனேந்த லில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஆண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இளையான்குடியில் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் முத்துராமலிங்க பூபதி, தாலுகா செயலாளர் ராஜூ, பரி சுத்தம் உட்பட பலர் பங்கேற்றனர். சிவகங்கை நகரில் நடை பெற்ற பிரச்சாரத்தில் ஒன்றி யக்குழு உறுப்பினர் வேங் கையா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, மணி யம்மா, மற்றும் சுரேஷ்உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காரைக்குடி நகர், வட்டாரப் பகுதிகளில் 24 மையங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. அரி யக்குடியில் மாவட்டச் செயலா ளர் பொறுப்பு கருப்புச்சாமி, தாலுகா செயலாளர் அழகர்சாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் மோகன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காரைக்குடி நகரில் தாலுகா செயலாளர் அழகர்சாமி பிரச்சாரம் நடைபெற்றது. கண்டரமாணிக்கம், பட்ட மங்கலத்தில் நடைபெற்ற பிரச்சா ரத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மோகன், தாலுகா செயலாளர் ஆறுமுகம், கண்ட ரமாணிக்கம் கிளைச் செயலா ளர் அழகப்பன், சாத்தனூர் கிளைச் செயலாளர் லட்சும ணன், பட்டமங்கலம் கிளைச் செய லாளர் மாணிக்கம், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காளையார்கோவில், கொல் லங்குடி, மறவமங்கலத்தில் நடை பெற்ற பிரச்சாரத்தில் ஒன்றியச் செயலாளர் தென்னரசு, மாவட்டச் செயலாளர் பொறுப்பு கருப்புச் சாமி, உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர். திருப்புவனத்தில் நடை பெற்ற பிரச்சாரத்தில் ஒன்றியச் செயலாளர் அய்யம்பாண்டி, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் வீரபாண்டி உட்பட ஏராளமா னோர் கலந்துகொண்டனர்.