சின்னாளப்பட்டி, செப்.6- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம் விளாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட விளாம்பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சத்துணவு வளாகத்தைச் சுற்றிலும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளது. மழைக் காலங்களில் இதே நிலைதான் தொடர்கிறது. இதனால் சுகாதாரச்சீர்கேடும் பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. இதில் பள்ளி நிர்வா கம் அலட்சியம்காட்டி வருவதால் கிராம மக்கள் கோபம டைந்துள்ளனர். மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்காத வகையில் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.