இன்று முதல் என்சிபிஎச்-இல் சிறப்பு புத்தகக் கண்காட்சி
10 முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடி
மதுரை, மே 31- நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் (என்சிபிஎச்) 73 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதை வாசகர்களோடு கொண்டாடும் விதமாக வருகிற 01.06.2023 முதல் 07.06.2023 வரை என்சிபிஎச் நிறுவன வெளியீடுகளுக்கு 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை தள்ளுபடியுடனும் மற்ற நிறுவன வெளியீடுகளுக்கு 10 சதவீத சிறப்புத் தள்ளுபடியுடனும் நூல்களை மதுரை மேலகோபுரத்தெரு 79-80 என்ற இலக்கத்தில் அமைந்துள்ள காட்சியறையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகஅரசு விருதுபெற்ற புவியரசு மொழிபெயர்த்த தஸ்தயேவ்ஸ்கியின் “கரமசோவ் சகோதரர்கள்” நாவல் சிறப்பு விலை ரூ.1250 (உரிய விலை ரூ.1750). ரூ.6500 விலை யுள்ள கோவை கம்பன்கழக கம்பராமாயணத்தொகுதி சிறப்பு விலை ரூ.4500 ரூ.1500 விலையுள்ள இறையன்பு எழுதிய “மூளைக்குள் சுற்றுலா” புத்தகம் சிறப்பு விலை ரூ.1000 ரூ.1500 விலையுள்ள நியூசெஞ்சுரியின் “38 தமிழக மாவட்டங்கள் வரலாறும் வளர்ச்சியும்” சிறப்பு விலை ரூ.1000. நேசனல் புக் டிரஸ்ட் நூற்கள் மற்றும் முன்னாள் குடி யரசு தலைவர் அப்துல்கலாம் எழுதிய மற்றும் அவரைப் பற்றிய நூல்களுக்கு 25 சதவீத சிறப்பு தள்ளுபடி. மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (20தொகுதிகள்) ரூ.5000 .சிறப்பு விலை ரூ.3500 பெரியார் சிந்தனை தொகுதிகளான நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும் உரிய விலை ரூ.4800. சிறப்பு விலை ரூ.3600. ரூ.1000க்கு மேல் புத்தகம் வாங்குபவர்களுக்கு அழகிய திருக்குறள் புத்தகமும் ரூ.5000க்கு மேல் புத்தகம் வாங்கு பவர்களுக்கு “உங்கள் நூலகம் மாத இதழ்” ஆண்டு சந்தா இலவசமாக வழங்கப்படும் என்று என்சிபிஎச் மண்டல மேலாளர் கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு சிறை
திருவில்லிபுத்தூர், மே 31- அருப்புக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண் டனை விதிக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி (49 ). இவர் கடந்த 12.2.23 அன்று மனநலம் குன்றிய 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறை யினர் பால்பாண்டியை கைது செய்தனர். இவ்வழக்கு திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந் நிலை யில் புதன்கிழமையன்று நீதிபதி பூர்ணஜெயஆனந்த் அளித்த தீர்ப்பில், பாலியல் தொல்லை கொடுத்த பால் பாண்டிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிப்பதாக தீர்ப்பளித்தார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.அரசு தரப்பில் வழக்கறிஞர் கலா ஆஜரானார்.
கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்திற்கு நீர்திறப்பு
தேனி, மே 31- முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக சாகு படிக்கும், தேனி மாவட்டத்தில் குடிநீருக்கும் 300 கன அடி வீதம் வியாழக்கிழமை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு இரு போக ஆயக் கட்டு பகுதிகளில் முதல் போகத்திற்கு 14707 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 200 கன அடி வீதமும் தேனி மாவட்டத்தின் குடிநீர் தேவைக் காக 100 கன அடி வீதமும் வினாடிக்கு 300 கன அடி தண்ணீரை ஜூன் 1முதல் 120 நாட்களுக்கு தேவைக்கேற்ப ,நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து திறக்கப்படும் என அர சாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரிக்கொம்பனை பிடிக்க பொம்மன் குழுவினர் வருகை
தேனி, மே 31- அரிக்கொம்பன் யானையை பிடிக்க நீலகிரியிலிருந்து பொம்மன் தலைமையி லான பழங்குடியினர் கம்பம் வந்தனர். இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல், சாந்தம்பாறை பகுதியில் பலரை காவு வாங்கிய அரிக் கொம்பன் யானை தேக்கடி வனப்பகுதியில் விடப்பட்ட பின் கடந்த 27 ஆம் தேதி கம்பம் நக ருக்குள் புகுந்தது. சாலைகள் மற்றும் தெருக் களில் நடந்து சென்றவர்களை விரட்டியது டன் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், ஆட்டோவையும் சேதப்படுத்தியது. சாலை யில் நடந்து வந்த கம்பத்தைச் சேர்ந்த பால்ராஜ் (65) என்பவரை தாக்கியதில் படு காயமடைந்து உயிரிழந்தார். இதனிடையே சுருளிப்பட்டி, நாரா யணத்தேவன்பட்டி பகுதிகளில் புகுந்த அரிக் கொம்பன் ராயப்பன்பட்டி சண்முகா நதி அணைப்பகுதியில் முகாமிட்டுள்ளது. இத னைப் பிடிப்பதற்காக அழைத்து வரப்பட்ட 3 கும்கி யானைகள் கம்பம் வனப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க மருத்துவ குழு வினரும் தயார் நிலையில் உள்ளனர். சண்முக நாதன் கோவிலில் புகுந்த அரிக் கொம்பன் அங்கே தங்கி இருந்து கோவிலில் பூஜை செய்து வரும் சரஸ்வதியம்மாள் (63) என்ப வரது வீட்டை இடித்தது. இதைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அவர் கோவிலுக்குள் சென்று கிரில் கேட்டை பூட்டிக் கொண்டார். அதன் பிறகு கோவிலுக்கு வந்த யானை அங்கிருந்த சமையலறை சுவற்றை சேதப் படுத்தி உள்ளே இருந்த பருப்பு, அரிசி, உப்பு ஆகியவற்றை தின்று விட்டு சென்றது. வனத்துறையினர், போலீசார் என 150-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து அரிக்கொம்பனை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தற்போது பாதிக்கும் மேற்பட்டோர் திருப்பி அனுப்பப்பட்டனர். சிறு சிறு குழுக்களாக சுழற்சி முறையில் யானை இருக்கும் இடத்தை தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். நீலகிரி முதுமலையை சேர்ந்த பொம்மன், சுரேஷ், சிவா, ஸ்ரீகாந்த் ஆகிய 4 பழங்குடியினர் கம்பம் வந்துள்ள னர். இவர்கள் 4 பேரும் அரிக்கொம்பனை அதன் பாணியில் நடந்து வெளியே கொண்டு வர கும்கி யானைகளுடன் செல்ல உள்ள னர்.
‘புகையிலையை தவிர்த்து தானியங்களை பயிரிடுக!’
ஒட்டன்சத்திரம், மே 31- சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனை சார்பில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையுறும்பு சமுதாயக்கூடத்தில் உலக புகையிலை ஒழிப்பு தினம் விவசாயிகள் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கோவை வேளாண்மை கல்லூரி இயக்குநர் சோமசுந்தரம் தலைமை ஏற்றுப்பேசினார். சென்னை அடையார் புற்றுநோய் மருத்துவமனை உளவியலாளர் திவ்யராஜ்பிரகாரகன் பேசுகையில், இந்தியாவில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 145 ஹெக்டேர் நிலப்பரப்பில் புகையிலை பயிரிடப்படுகிறது. புகையிலை பயிரில் பூச்சிக்கொல்லி அதிகளவு பயன்படுத்துவதால் மண்வளம் வெகுவாக பாதிக்கப்படு கிறது. புகையிலை பயிரிட்டுள்ள தோட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பல்வேறு விதமான தோல்நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் ஈரப்பதத் தோடு புகையிலையை எடுத்து வரும்போது அதிலி ருந்து நிக்கோடின் வெளியேறி உடலில் பட்டு வாந்தி, மயக்கம் ஏற்படுகிறது. இனி வரும் காலங்களில் புகையிலையை பயிரிட தவிர்த்து காய்கனிகள், உணவு தானியங்களை உற் பத்தி செய்யவேண்டும். ஏனென்றால் நமது நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படாமல் தவிர்க்க உணவு தானி யங்களை விவசாயிகள் உற் பத்தி செய்யவேண்டும். 41 சதவிதம் பேர் புகையிலை புற்றுநோயால் பாதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றார்.