districts

img

இராமநாதபுரத்தில் சமூக நீதி நாள் கருத்தரங்கம்

இராமநாதபுரம்,செப்.22- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்டக்குழு சார்பாக தந்தை பெரியார் பிறந்த நாள்- சமூக நீதி நாள் கருத்த ரங்கம் இராமநாதபுரம் அரசு ஊழியர் சங்க அலுவ லகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட் டத்தலைவர் த.முத்து லெட்சுமி தலைமை வகித் தார் .மாவட்டச்செயலாளர் டாக்டர் இரா. ஆ. வான் தமிழ் இளம் பரிதி துவக்கவுரை யாற்றினார். திராவிடர் கழக மாவட்டத்தலைவர் அண் ணாரவி,தமிழ்சங்கம் தலை வர் கவிஞர் மானுடப்பிரி யன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில செயற் குழு உறுப்பினர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்  கருத்து ரையாற்றினார். சிலம்பொலி கலைக்குழு சிறுவர்களின்  ஒயிலாட்டம் ,சிலம்பாட்டம் நடைபெற்றது.கமுதி சக்தி கலைக்குழுவின் பெரியார் என்னும் நாடகம் நடை பெற்றது.கிளை தலைவர் பழனியாண்டி நன்றி கூறினார்.