districts

img

புகையிலை பொருட்கள் விற்ற 6 கடைகளுக்கு சீல்வைப்பு

பாபநாசம், செப்.11-                  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகாவில் பாப நாசம், அய்யம்பேட்டை, சாலியமங்கலம், அம்மாப் பேட்டை உள்ளிட்டப் பகுதிகளில்  அரசால் தடை செய்யப்  பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த பெட்டி  கடை உள்ளிட்ட 6 கடைகளுக்கு சீல் வைக்கப் பட்டது. பாபநாசம், சாலியமங்கலத்தில் தலா ஒரு கடைக்கும், அம்மாபேட்டை, அய்யம் பேட்டையில் தலா 2 கடைக்கும்  சீல் வைக்கப்பட்டது. இதில் கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா,  பாபநாசம் வட்டாட்சியர் மதுசூத னன், பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்ட் பூரணி, ஆய்வாளர் ர் கலைவாணி உள்ளிட்டோர் நடவடிக்கை மேற்கொண்டனர்.