தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஐந்து பேருக்கு ரூ 1.79 லட்சம் பெறுமான செயற்கைக் கால்களை ஆட்சியர் க.வீ.முரளீதரன் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) என்.சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா ஆகியோர் உடனிருந்தனர்.