districts

img

இராஜபாளையம் நகர்மன்ற கூட்டம்

இராஜபாளையம், அக்.1- இராஜபாளையம் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் தலைமையில் நடைபெற்றது. இதில் வளர்ச்சி பணிக்காக 47 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பி னர் தங்கப்பாண்டியன் பேசுகையில்,  நகர் வளர்ச்சிக்காக உறுதுணையாக இருப்பேன். நகர்மன்ற தலைவருக்கு அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ராஜ பாளையம் நகர் வளர்ச்சிப் பணிக்காக எந்த உதவியும் செய்ய  தயாராக உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர்  கே. கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார் என்று  தெரிவித்தார் . நகர்மன்ற கூட்டத்தில். பாதாளச் சாக்கடை திட்டத்தால்  சாலைகள் மற்றும் தெருக்கள் மோசமான நிலையில் உள்ளதால் விரைவாக சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.  அதிகாரிகளிடம் பேசி விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  நகர்மன்ற தலைவி பவித்ரா ஷ்யாம் கூறினார்.