districts

மதுரை முக்கிய செய்திகள்

நடக்க இருப்பவை

மதுரை அம்பிகா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் இரத்ததானமுகாம்.  நாள்:செப்டம்பர் 24.


பேராசிரியர் வீட்டில்  31 பவுன் நகைக் கொள்ளை 

சின்னாளப்பட்டி,செப்.22-  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னாளப்பட்டி அருகில் உள்ள காந்திகிராம் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் ராஜாக்கண்ணு ( வயது 36). இவர் காந்திகிராம் அருகே உள்ள ராஜீவ் காந்தி நக ரில் குடியிருந்து வருகிறார்.  இவரது மனைவி சியாமளாதேவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆனதால் சியாமளாதேவி மதுரையில் உள்ள  தன் தாய் வீட்டில் இருந்துள்ளார் ராஜாக்கண்ணு தினமும் பல்கலைக்கழக பணியை முடித்துவிட்டு மதுரைக்கு சென்று குழந்தையை பார்த்து விட்டு வந்துள்ளார். இந்நிலையில் புதனன்று மதுரைக்கு சென்றுவிட்டு வந்த ராஜாக்கண்ணு வீடு திறந்து கிடந்ததை பார்த்தும் வீட்டில் வைத்திருந்த 31 பவுன்  நகை  கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சிய டைந்தார். இதுகுறித்து அம்பாத்துறை காவல்துறையி னருக்கு தகவல் தெரிவித்தார் .ஏஎஸ்பி கபிலன் ஆய்வாளர்  வெங்கடாசலம் உட்பட பலர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வத்திராயிருப்பு அருகே வேன் மோதி முதியவர் பலி

திருவில்லிபுத்தூர், செப். 22-  விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே இலந்தைகுளம் இந்திரா நகரில் வசிப்பவர் விவசாயி பாக்கியநாதன் (வயது 76) இவர் சம்பவத்தன்று  தனது மகள் சாந்தியுடன்  கோட்டையூரில் இருந்து இலந்தைகுளம் செல்லும் ரோட்டில் உள்ள பாலத்தின் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியே வந்த  வேன் மோதி பாக்கியநாதன்  பலத்த காயமடைந்து அதே இடத்தில் உயிரிழந்தார் .சாந்தி அளித்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில்  இன்று முதல் புத்தகத் திருவிழா

மதுரை,செப்.22- மதுரை தமுக்கம் மைதா னத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக செப்டம்பர் 23 முதல் 03.10. 2022 வரையில் புத்தகத் திரு விழா – 2022 நடைபெற வுள்ளது. தமிழக நிதி-  மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனை வர் பழனிவேல் தியாகரா ஜன், வணிகவரி -பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி   ஆகியோர் செப்டம்பர் 23 அன்று மாலை 4  மணியள வில் நடைபெறும் விழாவில் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து விழாப் பேருரை ஆற்றுகின்றனர்.  புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். 200-க்கும் மேற்பட்ட முன்னணி பதிப்பகங்களின் அரங்குகள் இடம்பெற்றுள்ளன. அதே போல, கலை இலக்கியம் சார்ந்த தகவல்களை அறிந்து பயன்பெற ஏதுவாகவும், பொழுதுபோக்கு அம்சங் கள் நிறைந்த சிறப்பு அரங்கு களும் ஏற்படுத்தப்பட்டுள் ளன. இந்த சிறப்பு அரங்கு களில் தினந்தோறும் காலை 11மணி முதல் மதியம் 1 மணி வரை 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான சிறார் பயிலரங்கம், கல்லூரி மாண வர்களுக்கான படைப் பூக்கப் பயிலரங்கம், மதியம் 2 மணி முதல் 3  மணி வரை குழந்தைகளுக்கான ”சிறார் சினிமா”, மதியம் 3 மணி முதல் 4 மணி வரை எழுத்துலக பிரபலங்கள் பங்கேற்கும் ”பிரபலங்கள் வாசிக்கிறார்கள்”,

மாலை 05.30 மணி முதல் 06.30 மணி வரை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் கதை கூறும் ”கதை கதையாம் கார ணமாம்” போன்ற பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடை பெறவுள்ளன. அதேபோல, தினந்தோ றும் காலை 11.30 மணி முதல் மதியம் 01.30 மணி வரை யில் மாணவ, மாணவியர்க ளுக்கான பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டு ரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன. மாலை 4 மணி முதல் பள்ளி மாணவ, மாண வியர்கள் பங்கேற்கும் கலை  நிகழ்ச்சிகள், மாலை 5 மணி முதல் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடை பெறவுள்ளன. தினந்தோறும் மாலை 6  மணி முதல் இரவு 9 மணி வரை பிரபல எழுத்தாளர்கள், பட்டி மன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் ”சிந்தனை அரங்கம்” நிகழ்ச்சி நடை பெற உள்ளன. மேலும், புத்த கத் திருவிழாவிற்கு வரும் அனைவரும் சுவையான, சுகாதாரமான சிற்றுண்டி உணவு வகைகளை உண்டு மகிழ உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள், புத்தக வாசிப்பை விரும்பும் அனை வரும் பயன்பெறும் வகை யில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இந்தப் புத்தகத் திரு விழா சிறப்புடன் நடத்திட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதனை பொது மக்கள் அனைவரும் கண்டு களித்திடவும், புத்தகத் திருவிழாவில் இடம்பெறும் பதிப்பகங்களின் மதிப்புமிகு புத்தகங்களை வாங்கி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மானாமதுரை வாரச்சந்தை கடைகளுக்கு  தலா ரூ.10 ஆயிரம் தீவிர வசூல் வேட்டை  நகராட்சி ஆணையரிடம் சிபிஎம் புகார்

 சிவகங்கை,செப்.22-  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை கடைகளு க்கு டெண்டர் விடும் முன்பே ஒரு கடைக்கு ரூ.10 ஆயிரம் வீதம் வசூல் நடைபெறுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின்  மானாமதுரை ஒன்றியக்குழு சார்பாக நகராட்சி ஆணையரிடம்  புகார் மனு அளிக்கப்பட்டது.  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட வார சந்தை புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இன்னும் கடைகள் ஒதுக்கி டெண்டர் விடப்படாத சூழ்நிலை உள்ளது.இது போன்ற நிலையில் 250 கடைகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் மேலும் தரையோரங்களில் கடை அமைப்ப தற்கும் தீவிர வசூல் வேட்டையை ஆளுங் கட்சியினர் நடத்துவது  தொடர்பாக மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி ,ஒன்றிய செயலாளர் ஆண்டி  உள்ளிட்டோர் நக ராட்சி ஆணையாளரிடம் புகார் செய்திருக்கி றார்கள்  வசூல் செய்வது தடுக்கப்பட வேண்டும்.  நியாயமான நேர்மையான முறையில் கடை கள் சாதாரண ஏழை எளிய மக்களுக்கு கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் .இத்தோடு புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பறை கூடங்களில் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் .மேலும் மானாமதுரை நகர பேருந்து நிறுத்தவளாகத்தில் உள்ள இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் புகார் செய்திருக்கிறார்கள்.

குரங்கு அம்மைக்கு பெண் பலியா? சுகாதாரத்துறை விசாரணை 

தேனி ,செப் .22- உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்த பெண் குரங்கு அம்மை நோய்  பாதிக்கப்பட்டு இறந்தாரா என சுகாதாரத் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் . தேனி அருகே  பழனிசெட்டிபட்டி சுப்பிரமணிய சிவா தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் தற்போது கூட்டுறவு வங்கியில் அலுவலராக பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி பரிமளா (35). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் பரிமளாவின் உடலில் பல்வேறு இடங்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது.இது உடல் முழுவதும் பரவத் தொடங்கி யதால், வடபுதுப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில்  தங்கியிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சுமார் 15 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலை யில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத தால் கொப்புளங்கள் உடல் முழுவதும் பரவியுள்ளது. இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் ஆஸ் பத்திரியில் பரிமளா அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊரான பழனிச்செட்டிபட்டிக்கு கொண்டுவரப்பட்டு அவசர அவசரமாக அடக்கம் செய்யப்பட்டுள்ளது.அவருக்கு  குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறந்தாரா என சுகாதாரத்துறையினர் விசாரணை மேற்கொண்டார்.

இந்து மக்கள் கட்சியினர் மீது வழக்கு

விருதுநகர், செப்.22- விருதுநகரில் மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து போராட்டம் நடத்த  முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 12 பேர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, சமீபத்தில் மனுதர்ம நூலில் சூத்திரன் குறித்து எழுதி வைத்துள்ள கருத்தை தெரிவித்தார். இதை தவறாக இந்து முன்னணி மற்றும் இந்து மக்கள் கட்சியினர் அமைப்பி னர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விருது நகர் பாண்டியன் நகரில் காவல்துறையின் அனுமதி யின்றி போராட்டம் நடத்த முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த  12 பேரை கைது செய்தனர்.  

போலி நகை கொடுத்து ரூ.82 ஆயிரம் பெற்ற இருவர் மீது வழக்கு

சிவகாசி, செப்.22- சிவகாசியில் தனியார் பைனான்சில் போலியான நகை கொடுத்து ரூ.82 ஆயிரத்தை பெற்றுச் சென்ற பெண் உள்பட இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிவகாசி, சிவன் சன்னதி பகுதியில் தனியார் பைனான்சில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் ஆறுமுகச்சாமி. இவரிடம் 2 பேர் வந்து தங்களிடம் உள்ள தங்க வளையல்களை கொடுத்து அடமானமாக பணம் கேட்டுள்ளனர். இதையடுத்து ஆறுமுகச்சாமி ரூ.82ஆயிரம் வழங்கியுள்ளார். பின்பு, நகையை பரிசோதித்து பார்த்ததில் வளையல்களின் உள்ளே காப்பர் கம்பி இருந்தது தெரிய வந்தது. எனவே, அடமா னம் வைத்தவர்களின் முகவரியை பார்த்துள்ளார். அதிலும் தவறான பெயர் இருந்துள்ளது. இதையடுத்து மேலும் அவர் விசாரித்ததில் வத்ராப் இந்திரா காலனியைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற பார்வதி, மற்றும் இராஜபாளையம் ஆண்டமாள்புரத்தைச் சேர்ந்த சர்ச்சல் எட்வின் ஆகியோர் என்பது தெரிய வந்தது. எனவே, இதுகுறித்து சிவகாசி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் தேடி வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவர் மீது வழக்கு

அருப்புக்கோட்டை, செப்.22- பாலவநத்தம் பகுதியைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி. உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பள்ளி க்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரது தாயார் வேலைக்குச் சென்ற நிலையில், அச்சிறுமி, கடைக்குச் சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த போஸ் என்பவர் சிறுமியை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை  கொடுத்துள்ளார். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போஸை தேடி வருகின்றனர்.

நகைக்காக புதுப்பெண்ணை கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை 

திருவில்லிபுத்தூர்,செப்.22-  விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது கீழதிருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணிகண் டன் (28)அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் பரமேஸ்வரி (42) பரமேஸ்வரி மகன் ஈஸ்வரன் ( எ) கோடீஸ்வரன் (22) மற்றும் கோடீஸ்வரனின் நண்பர் சேகர் என்ற டைசன் (22) கடந்த 8.08.2020  அன்று செல்வமணிகண்டனின் மனைவி திருமணம் ஆன 40 நாளில் தனியாக இருந்தபோது வீட்டி ற்குள் புகுந்த பரமேஸ்வரி மகன் ஈஸ்வரன் (எ) கோடீஸ்வ ரன் உள்பட 3 பேரும் நகைக்காக செல்வமணிகண்டனின் மனைவியை வெட்டிக்  கொலை செய்தனர். இது தொடர்பாக செல்வ மணிகண்டன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பரமேஸ்வரி,மகன் ஈஸ்வரன்(எ) கோடீஸ்வரன் மற்றும் சேகர் (எ) டைசன் ஆகிய மூவரை யும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பான வழக்கு திருவில்லி புத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கிய மகிளா நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளிகளான ஈஸ்வரன் என்ற கோடீஸ்வரன், சேகர் என்ற டைசன் ஆகிய இருவருக்கு ஆயுள் தண்ட னையும், பரமேஸ்வரிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் மூவருக்கும் ரூ. 23 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

தேனி இஸ்லாமிய ஆராய்ச்சி மையத்தில் என்ஐஏ  அதிகாரிகள் சோதனை

தேனி,செப்.22- தேனி அருகே வீரபாண்டி பேரூரா ட்சிக்கு உட்பட்ட முத்துத்தேவன்பட்டியில் அறிவகம் என்ற பெயரில் இஸ்லாமிய ஆராய்ச்சி மையமும், பாலஹிய்யா என்ற பெயரில் அரபிக்கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.வியாழனன்று அதிகாலை 3 மணிக்கு இங்கு தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஆய்வாளர் ரமேஷ்மீனா தலைமை யிலான 9 போலீஸார் அறிவகத்தில் உள்ள அறைகளையும், கல்லூரியிலும் சோதனை நடத்தினர். 4 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில் அங்கிருந்த லேப்டாப், முதல்வர் ஷம்சுல்இப்பாலா தவூத்தின் மொபைல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்பு கல்லூரி மாணவர்கள் 45பேரின் பட்டியல், வருகைப்பதிவேடு, அவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை சேகரித்தனர். என்ஐஏ.அதிகாரிகள் சோதனை நடத்துவதை அறிந்த இஸ்லாமிய அமைப்பி னர் அறிவகம் முன்பு கூடினர். எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை வெளியேறும் படி கோஷமிட்டனர்.  இது குறித்து அரபிக்கல்லூரி முதல்வர் ஷம்சுல்இக்பாலதாவூதி கூறுகையில், கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் எங்கள் மீது மத்தியஅரசின் அழுத்தத்தினால் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. எங்களுக்கு வாரண்ட் நகல் தரவில்லை. புனிதமாக கருதும் மதரஸாவில் சோதனை என்ற பெயரில் ஷூஅணிந்தபடி அதிகாரிகள் சோதனையிட்டனர். இதனை கண்டிக்கி றோம். இச்சோதனையை சட்டரீதியாக எதிர்கொண்டு உண்மையை நிரூபிப்போம் என்றார். கம்பத்தில் ஒருவர் கைது தேனி மாவட்டம் கம்பத்தில் வசிப்பவர் யாசர் அராபத். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மதுரை மண்டல செயலாளராக உள்ளார். இவரது வீட்டில்  தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சுமார் 3மணி நேர சோதனைக்கு பிறகு அவரை  கைது செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இவரது கைதை கண்டித்து கம்பம் சிக்னல் பகுதியில் இஸ்லா மியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

தேனி ஆட்சியரகம் முன்பு மறியல்

தேனி, செப். 22- பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு வன வேங்கைகள் கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.  மாவட்டச் செயலர் ஏகலைவன் தலைமை வகித்தார்.தேனி காவல் ஆய்வாளர் வெங்கடாச்சலம் தலைமையில் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும், மறியல் போராட்டத்தை கைவிடவில்லை. அப்போது, மதுரைக்கு வந்திருந்த பாஜக தேசியத் தலைவர் நட்டாவை வரவேற்பதற்கு தேனியிலிருந்து பாஜகவினர் சென்ற வேன்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் சாலை மறியலில் சிக்கியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பாஜக நிர்வாகிகள் சமரசம் செய்தும், அவர்கள் வாகனங்கள் செல்வதற்கு வழிவிடவில்லை. இந்த நிலையில், தேனி காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்தி பன் தலைமையில் அங்கு சென்ற போலீசார்  மறியலில் ஈடுபட்ட வர்களை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி காவல் துறை வாகனத்தில் ஏற்றினர்.  போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் மயங்கி விழுந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  மறியலில் ஈடுபட்ட 32 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட மொத்தம் 56 பேரை போலீசார் கைது செய்தனர்.
 

;