தேனி, ஜன.22- பொதுமக்களின் கடும் எதிர்ப்பை மீறி தனியார் மது பார் திறக்கப்பட்டதால் கிளர்ந்தெழுந்த பொதுமக்கள் முற்றுகை யிட்டு மூட வைத்தனர். பெரியகுளம் நகரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்படாத நிலையில் ஏற்க னவே 3 தனியார் மது கூடங்கள் செயல் பட்டு வருகின்றன.பொது மக்கள், பெண் கள், குழந்தைகள் கூடும் இடத்தில் தனி யார் மது பார்கள் அமைந்துள்ளன. இட மாற்றம் செய்ய வேண்டும் என வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகள் கடந்த 3 மாதங்களாக போராடி வருகின்றன. புதிய மதுக்கூடம் இந்நிலையில் பெரியகுளம் பேருந்து நிலையம் அருகே கடும் எதிர்ப்புக்கிடை யில் தனியார் மது பார் ஞாயிறன்று திறக் கப்பட்டது .மதுக்கடையை திறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சி யர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரி டம் மனு அளிக்கப்பட்டது .இதனையும் பொருட்படுத்தாமல் தனியார் மது பார் இயக்கியது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போராட் டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து பார் தற்காலிகமாக மூடப்பட்டது.