திருவனந்தபுரம், நவ.17- கேரளத்தில் ஏழைகளு க்கு வீடு கட்டித் தரும் திட்டமா ன லைப் மிஷனின் 2020 பட்டியலில் உள்ள பயனாளி களுக்கு வீடுகள் கட்ட நட வடிக்கை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்ளாட் சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ் மேலும் கூறி யதவாது: அரசு உத்தரவா தத்தின் கீழ் கேயுஆர்டிஎப்சி மூலம் உள்ளாட்சி அமைப்பு களுக்கு ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்தி புதிய பட்டியலில் உள்ள பயனாளி களுக்கு வீடு கட்டும் பணி தொடங்கப்படும். முதற்கட்ட மாக 70,000 பேருக்கு வீடு கள் வழங்கலாம் என்பது எதிர்பார்ப்பு. 2017 பட்டிய லிலிருந்து இதுவரை நிதிக் கான ஒப்பந்தக் கோரிக்கை யை முன்வைக்காத பயனா ளிகளுக்கு 2020 பட்டியலில் உள்ளவர்களுக்குப் பதிலாக வாய்ப்பு வழங்கப்படும். ஒவ்வொரு உள்ளூர் சுய-அரசு அமைப்பிலிருந்தும் (உள்ளாட்சி) நிதி கோராத பயனாளிகளின் எண்ணிக் கைக்கு இணையான பயனா ளிகள் புதிய பட்டியலிலி ருந்து தேர்ந்தெடுக்கப்பட லாம். லைப் 2020 பயனாளி கள் பட்டியலில் இருந்து பட்டியல் சாதிகள், பழங்குடி யினர் மற்றும் மீனவர் சமூ கத்தில் வீடற்ற பயனாளிகள் மற்றும் தீவிர வறுமை கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்ட வீடற்றவர்கள் முதல் நிலை தகுதியாளர்களாக கருதப் படுகிறார்கள். ஒரு பயனா ளிக்கு அதிகபட்சமாக ரூ.2,20,000 கடனாகவும் அனு மதிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு வீட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட மேம்பாட்டு நிதியையும், மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கக் கூடிய அதிகபட்சத் தொகை யையும் பயன்படுத்தி லைப் 2020 பட்டியலில் நிலம் மற்றும் வீடு வழங்கும் திட்டத்தை மேற்கொள்ள லாம். 2017 லைஃப் பட்டியல் நிலம் உள்ள வீடற்றவர்க ளுக்கும், 2019 பட்டியலில் எஸ்சி/எஸ்டி/மீனவர் கூடுதல் பட்டியலில் உள்ள தகுதியான பயனாளிகள் அனைவருக்கும் சில உள்ளாட்சி அமைப்புகள் வீடுகள் வழங்கியுள்ளன. அத்தகைய உள்ளாட்சி சுய-அரசு அமைப்புகளில் வீட்டுத் திட்டத்திற்காக மூன்ற டுக்கு பஞ்சாயத்தால் பெறப் படக்கூடிய மற்றும் உள்ளாட்சி சுயநிர்வாக அமைப்புகளுக்கு ஒதுக்கப்ப டக்கூடிய அதிகபட்ச தொ கையைப் பயன்படுத்தி, லைப் 2020 பட்டியலின் கீழ் நிலமும் வீடும் வழங்கும் திட்டத்தை மேற்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒரு உள்ளாட்சி அமைப் பின் பயனாளிகள் மற்றொரு உள்ளாட்சி அமைப்புக்குள் நிலம் வாங்கினாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மூலம் நிலம் வாங்குவதற்கும், வீடு கட்டுவதற்குமான தொகை யை பயனாளிக்கு வழங்க வேண்டும். இந்த விவகா ரத்தில் முன்னதாகவே சில குழப்பங்கள் இருந்ததால், அந்த உத்தரவு புதுப் பிக்கப்பட்டு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. லைப் பவன திட்டத்தின் கீழ் 3,14,425 வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 29,189 வீடுகள் கட்டும் பணி கள் இறுதி கட்டத்தில் உள்ள தாக அமைச்சர் தெரி வித்தார்.