districts

மதுரை முக்கிய செய்திகள்

 நிர்வாகிகள் தேர்வு 

திருவில்லிபுத்தூர், செப். 17- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்க  மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் கூட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் பி முத்துக்குமரன்,  மதுரை மாவட்ட தலைவர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சி. ரமணன் கூட்டத்தில்  மாவட்டத் தலைவராக பாலமுருகன், மாவட்டச் செயலாளராக விஜயகுமார், மாவட்டப் பொருளா ளராக பரமசிவம், மாவட்ட அமைப்பு செயலாளராக முனியசாமி, மாவட்டத் தணிக்கையாளராக விஜயகுமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
 

அலங்காநல்லூர் அருகே  ஒருவர் கொலை

மதுரை, செப்.17- மதுரை  அலங்காநல்லூர் அருகே உள்ள கள்ளிவேளி பட்டி கம்மாபட்டியைச் சேர்ந்தவர் கர்ணா. இவரது மகன் பொன்மணி (25). இவர் தனிச்சியம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.  வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்ற பொன் மணி இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இத னால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள சாலையில் கழுத்து அறுபட்ட நிலையில் முகத்தில் காயங்களுடன் பொண்மணி பிணமாகக் கிடந்தார். தகவலறிந்த அலங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி உடற் கூராய்விற்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பள்ளி மாணவி கர்ப்பம்: ஒருவர் கைது

விருதுநகர், செப்.17- விருதுநகர் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி. 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சக்திகுமார் என்பவர் சிறுமியை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி பாலியல் வல்லுறவில் ஈடு பட்டுள்ளார். இதனால், அச்சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை செய்த விருதுநகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் சக்திகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

ரூ. 3லட்சம் மதிப்பிலான  லாட்டரி சீட்டுகள் பறிமுதல்

தேனி ,செப்.17- தேனிமாவட்டம்  லோயர்கேம்ப் காவல்துறை சார்பு ஆய்வாளர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தலைமையில்  காவல்துறையினர்  குமுளி மலைச்சாலை மாதா கோவில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் கேரள மாநில லாட்டரி சீட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தேனி அல்லிநகரத்தை சேர்ந்த சவுந்திரராஜன் (38) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த ரூ.3,14,780 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

வேலை கேட்ட காங். கட்சியினர் கைது

திண்டுக்கல், செப்.17- பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக் கல்லில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. தடையை மீறி பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகர் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலிருந்து ஆர்ப்பாட்டத்திற்கு புறப்பட்ட மாநகர் மாவட்டச்செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர்.

அதிமுக ஆட்சியில் சட்ட விரோதமாக  முல்லை பெரியாற்றில் தண்ணீர் கடத்தல்  குழாய்கள் அகற்றம்

 சின்னமனூர், செப். 18- தேனி மாவட்டம் சின்ன மனூர் முல்லை பெரியாற்றி லிருந்து சட்ட விரோ தமாக தண்ணீர் கடத்திய 37 குழாய் கள் காவல்துறை பாது காப்புடன் அகற்றப்பட்டது,. சின்னமனூரில் விவசா யமே மூலதனமாக இருப்ப தால் 4 ஆயிரம் ஏக்கரில் இரு போக நெல் சாகுபடியும், மற்றும் பிற விவ சாயமான தென்னை, வாழை, கரும்பு, திராட்சை, காய்கறிகள், தக்காளி என பல  தரப்பட்ட விவசாயம் தொடராக நடந்து வருகிறது. இதனைப் பயன் படுத்தும் விதமாக சின்ன மனூர் வேம்படிக்களம் பகு தியில் நீண்ட முல்லை பெரி யாற்று பகுதியில் பல இட ங்களில் உறைகிணறுகள் அமைக்கப்பட்டு சட்ட விரோ தமாக எவ்வித அனுமதியும் இன்றி சின்னமனூர் முத்த லாபுரம் பிரிவு வழியாக நான்கு இன்ச், முதல் 6, 8  இன்ச் வரை பூமியில் குழாய் கள் பதித்து சுமார் 15 கிலோ  மீட்டர் தூரம் வரை தண்ணீர் கொண்டு சென்றுள்ளனர்.  மேலும் இந்தத் தண் ணீரை  மெகா தொட்டிகளில் நிரப்பி தேக்கி வைத்து ஆங் காங்கே  இரண்டு ஏக்கர் மூன்று ஏக்கர் ஐந்து ஏக்கர் என்ற அளவில் இருக்கின்ற விவசாயிகளுக்கு முன் தொகை பெற்றுக் கொண்டு ஒவ்வொரு முறை யும் தண்ணீரை கொடுக் கும் போது பணம் வசூலித்து விற்பனை செய்து வருகின்ற னர் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து அரசிற்கு புகார் சென்றது. இது குறித்து அரசும் இந்த புகார் அடிப் படையில் உடனடியாக ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதில் நெடுஞ்சாலைத்துறை பொ துப்பணித்துறை வருவாய்த் துறை காவல்துறை துறை உள்ளிட்ட அதிகாரிகள் இப் பகுதியில் சில இடங்களில் சோதனை செய்யப்பட்டது.    இதில் குறிப்பாக சின்னமனூர் முத்துலாபுரம் பிரிவு சாலையில் சட்ட விரோ தமாகக் குழாய்கள் பதிக் கப்பட்டு தண்ணீர் கடத்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொதுப் பணித்துறை, நெடுஞ் சாலைத்துறை, வருவாய்த் துறை காவல்துறை துறை  அதிகாரிகள்  ஜேசிபி இயந்தி ரம் மூலம் முத்துலாபுரம் பிரி வில் தோண்டி தண்ணீர் கொண்டு சென்ற 37 பிவி சி  குழாய்களை அகற்றினர். இதற்கிடையில்  கம்பம் பள்ளத்தாக்கு விவசாய சங்கத்தினர் இன்று 19 ம் தேதியிலிருந்து சின்னமனூ ரில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போ வதாக அறிவித்துள்ளனர்.

ரயில்வே புறம்போக்கு நிலத்தில் வசித்தவர்களுக்கு 85 குடும்பங்களுக்கு இடம், வீடு எப்போது கிடைக்கும் வழக்கம்போல் “நடவடிக்கை எடுப்பதாக” வாக்குறுதி

சிவகங்கை, செப்.17- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணாநக ரில் கடந்த 100 ஆண்டுக ளுக்கும் மேலாக ரயில்வேக் குச் சொந்தமான புறம் போக்கு இடத்தில் சுமார் 85 பட்டியல் பழங்குடியினர் மற்றும் பட்டியல் அல்லாத குடும்பங்கள் வீடுகள் கட்டி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவருக் கும் தமிழக அரசின் சார்பாக இலவசமாக வீட்டு மனைப் பட்டா வழங்வேண்டும். அதில் வீடு கட்டிக் கொடுத்த பின்பு ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த வேண்டு மென கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மாற்று இடம், வீடு வழங்கிவிட்டுத் தான் மக்களை அகற்ற வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது.  இந்த நிலையில் தலித் விடுதலை இயக்க மாவட்ட அமைப்பாளர் இராம கிருஷ்ணன் தலைமையில் தேசிய தாழ்த்தப்பட்ட(ம) பழங்குடியின ஆணை யத்தின் தேசிய துணைத் தலைவர் அருண் ஹால்ட ரை சந்தித்து மனு அளித்த னர். இந்த மனு தமிழக அரசின் ஆதிதிராவிட(ம) பழங்குடியின நலத்துறை முதன்மைச் செயலர் ஜவ கர்க்கு பரிந்துரை செய்யப் போது. மனுவின் மீது  வழக்கம் போல் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தகர செட்டில்  வெடி தயாரித்தவர் மீது வழக்கு

வெம்பக்கோட்டை, செப்.17- விருதுநகர மாவட்டம் வெம்பக் கோடடை அருகே தகர செட்டில் பட்டாசு வெடிதயாரித்தவர் மீது காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வெம்பக்கோட்டை காவல்துறை யினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது, காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பு ராஜ்(39) என்பவர் அரசு அனுமதியின்றி எளிதில் தீப்பற்றக் கூடிய வகையில் வீட்டின் பின்புறம் உள்ள தகர செட்டில் வைத்து லட்சுமி வெடி மற்றும் பென் 10 வெடிகளை தயார் செய்து கொண்டிருந்தார். வெடிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் சுப்புராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கந்துவட்டி கொடுமை: ஒருவர் தற்கொலை  

சிவகாசி, செப்.17- விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல், முத்துமாரி நகரைச் சேரந்த பழனிசாமி மகன் பிரகாஷ் ராஜ்(26). லேத்தில் வேலை செய்து வந்துள் ளார். இந்நிலையில் குடும்பச் செலவுக்காக வட்டிக்குப் பணம் வாங்கியுள்ளார். இதை யடுத்து, கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இறப்பதற்கு முன்பு, தனது சாவிற்கு கடன் கொடுத்தவர்களின் தொந்த ரவு தாங்க முடியாமல் தற்கொலை செய்து  கொள்கிறேன் என வீடியோ மூலம் தெரி வித்துள்ளார். இதுகுறித்து பிரகாஷ்ராஜின் தாயார் சீதா கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் காவல்துறையினர், வட்டிக்குப் பணம் கொடுத்த மாணிக்கம்(29), கருப்பசாமி(29), லட்சுமி(53), தமிழ்செல்வி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சர்வதேச  ஓசோன் தினம்

திருவில்லிபுத்தூர்,செப்.16-  சர்வதேச ஓசோன் தினத்தை யொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து மேல்நிலைப் பள்ளியில் ஓசோன் தினம் வெள்ளிக்கிழமை கொண்டா டப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் தலைமை வைத்தார். உதவித் தலைமை ஆசிரியர் பரமேஸ்வரன் முன் னிலை வைத்தார். முதுகலை வேதியியல் ஆசிரியர் புதிய விநாயகம் சிறப்புரை ஆற்றினார். ஓசோன் தினத்தையொட்டி பள்ளி வளாகங்களில் மரக்கன்று கள் நடப்பட்டன.  மாணவி விஜயலட்சுமி ஓசோன் குறித்த கவிதை வாசித்தார்.  உதவித் தலைமை ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார்.



 

;