மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
விருதுநகர், ஜூலை 5- அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி தனிராஜ்யம் நடத்தி வரும் பி.முரு கன் கல்குவாரி மற்றும் கிரசர் நிறுவனத் திற்குத் துணை போகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குவாரியை நிரந்தரமாகத் தடை செய்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டடக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் விருது நகர் மாவட்டச் செயலாளர் கே.அர்ச்சு ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டம் அருப் புக்கோட்டை தாலுகா புலியூரான் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் பன் னிக்குண்டு. இங்கிருக்கும் கண்மா யைக் கல்குவாரி நிறுவனங்கள் ஆக்கிர மிப்பு செய்து, அதன் கரை மற்றும் நீர் வரத்து ஓடையை மூடி அதன் மீது சட்ட விரோதமாகச் சாலை அமைத்துப் பயன் படுத்தி வந்தனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கல்குவாரிகளின் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். சட்டவிரோதமாகப் போடப்பட்ட சாலையில் கனரக வாக னங்கள் செல்லக்கூடாது. நூறுநாள் வேலைத்திட்டத்தில் தூர்வாரிய ஓடை யை மேவி சாலை அமைத்தது சட்ட விரோதம். ஆக்கிரமிப்பிற்கு முன்பி ருந்த (2016-17) நிலையே தொடர வேண் டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனைப் பின்பற்றி வருவாய் வட்டாட்சியர் கண்மாய் உள்பகுதி மற் றும் கண்மாய் கரைகளில் ஆக்கிர மித்துப் பாதை அமைக்கப்பட்டுள்ள பாதை மற்றும் மேற்படி கண்மாய்க்கு வரும் நீர் வழித்தடங்களில் கனரக வாக னங்கள் சென்று வரத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆனால் தற்போது பன்னிக்குண்டு கண்மாய் அருகே இயங்கி வரும் முரு கன் கல்குவாரி நிறுவனம் நீதிமன்ற உத்தரவையும், அதனைப் பின்பற்றி வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவையும் மதிக்காமல் ஆக்கிமிரப்பு செய்து அமைக்கப்பட்ட கரை மற்றும் நீர் வரத்து ஓடை சாலையில் கனகர வாக னங்களை இயக்கி வருகிறது. இதனை அதிகாரிகள் தடுக்க தவ றிய நிலையில். பன்னிக்குண்டு, புலி யூரான், கோணப்பனையேந்தல் கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை யில் பல கட்ட போராட்டங்களை நடத்தி னோம். அதன்படி கனரக வானங்கள் செல்லாதவாறு அதிகாரிகள் உத்தர வுப்படி கல்தூண்களும் நடப்பட்டன. ஆனால் அதனைக் கல்குவாரி தரப்பி னர் ரவுடிகளை வைத்துப் பிடுங்கி எறிந்த னர். அதன் பின்னர் அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகன், கல் குவாரி நிறுவனத்தின் செயல்பாட்டை கடந்த ஜூன் 13 அன்று தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித் தார். கல்குவாரிக்கு ஆதரவாக துணை வட்டாட்சியர்
ஆனால் அந்த நிறுவனம் வட்டாட்சி யரின் உத்தரவு மற்றும் நீதிமன்ற உத்த ரவை மீறித் தொடர்ந்து நிறுவனத்தை இயக்கியும், ஆக்கிரமிப்பு செய்யப் பட்ட சாலையில் கனரக வாகனங்களை இயக்கி வருகிறது. புலியூரான கிராம மக்கள் ஜூன் 28 அன்று இரவில் வாக னங்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது கல்குவாரி தரப்பினர் ரவுடி களை ஏவிவிட்டு சட்ட ஒழுங்கு பிரச்ச னையை உருவாக்க முயன்றனர். அதன் பின்னர் காவல்துறையினர் வந்து தடுத்து நிறுத்தினர். அப்போது பிடித் துக் கொடுத்த கனரக வாகனங்கள் மீது வருவாய்த் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே போல் கடந்த ஜூலை 3 நள்ளிரவில் விதிகளை மீறி 30 மேற்பட்ட டாரஸ் லாரி களை இயக்கிய நிலையில் கிராம மக் கள் மறியல் செய்து தடுத்து நிறுத்தி னர். வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரி களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த துணை வட் டாட்சியர் கல்குவாரி நிர்வாகத்திற்கு ஆதரவாகப் பேசியதோடு கனரக வாக னங்களையும் வழக்குப் பதிவு செய்யா மல் செல்ல அனுமதித்துள்ளார். இத னால் தொடர்ந்து அந்த பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. மேலும் இதுவரை நீதிமன்ற உத்த ரவு அடிப்படையில் கனரக வாகனங்கள் செல்லக் கூடாது என அறிவிப்புப் பலகை கூட வைக்கவில்லை. கனரக வாகனங்கள் செல்லாதவாறு கல் தூண்களோ, தடுப்பு இரும்புத் தூண் களோ நடப்படவில்லை. இது மறை முகமாக கல்குவாரி நிர்வாகத்திற்கு ஆதரவாக வருவாய்த் துறை அதிகாரி கள் செயல்படுவதையே காட்டுகிறது. இந்த செயல் மக்கள் மத்தியில் ஆட்சி யின் மீது அதிருப்தியை உருவாக்கி வரு கிறது. எனவே தமிழக முதல்வர் உடனே தலையிட்டு நடவடிக்கை எடுத்திட வேண்டும். பன்னிக்குண்டு, புலியூரான, கோணப்பனையேந்தல் கிராம மக்க ளின் நலனைப் பாதுகாத்திட வேண் டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.