districts

img

திண்டுக்கல்லில் பெரியார் பிறந்த தினம் கடைப்பிடிப்பு

திண்டுக்கல், செப்.17- தந்தை பெரியாரின் 144-ஆவது பிறந்ததினத்தை யொட்டிதிண்டுக்கல் ஸ்டேட் வங்கி அருகில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக  மாவட்டத் துணைச்செயலா ளர் நாகராஜன், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன், மாநகராட்சி  துணை மேயர் ராஜப்பா, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சி.சீனிவா சன், இரா.விஸ்வநாதன்,  திராவிடர் கழகம் சார்பில்  மாவட்டத்தலைவர் வீரபாண்டியன், மாவட்டச்செயலா ளர் ஆனந்த முனிராஜ், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனக்குழு உறுப்பினர் மயிலை நா.கிருஷ் ணன், தந்தை பெரியார் திராவிடர் கழக கொள்கை பரப்புச்செயலாளர் துரை.சம்பத், தமிழர் சமூக நீதிக் கழக நிறுவனத் தலைவர் சுரா.தங்கபாண்டியன், பொதுச்செயலாளர் சரவணவேல். தமிழ்புலிகள் கட்சியின் மாநில வழக்கறிஞர் குழுத் தலைவர் கே.சின்னக்கருப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாநிலத் தலைவர் டி.செல்லக்கண்ணு, மாவட்டத்தலைவர் எம்.ஆர்.முத்துச்சாமி, மாவட்டச் செயலாளர் கலைச்செல்வன், மாவட்டத் துணைத்தலை வர் டி.முத்துச்சாமி உள்ளிட்ட பலர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகர் செயலாளர் அரபுமுகமது,  தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் நகர் கிளைத்தலைவர் வைத்திய லிங்கபூபதி, செயலாளர் தாமோதரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.