மதுரை, மே 14- மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி - 2022 செய் தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன், நிதி - மனித வள மேலாண் மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வணிக வரி - பத்திரப் பதிவுத் துறை அமைச் சர் பி.மூர்த்தி ஆகியோர் மே 14 சனிக்கிழமை அன்று துவக்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் கூறுகை யில், திருவிழா நகரான மதுரை யில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக அரசுப் பொருட்காட்சி நடத்தப்பட்டு வரு கின்றது. கொரோனா தொற்று பர வலை கட்டுப்படுத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட பல் வேறு கட்டுப்பாடுகளின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த அரசுப் பொருட்காட்சி நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில், நடப்பாண்டில் அரசுப் பொருட்காட்சியினை மிகச் சிறப்புடன் நடத்திட திட்டமிடப்பட்டு தமுக்கம் அரசுப் பொருட்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் சார்பாக நடத்தப்படும் 212 - வது அரசுப் பொருட்காட்சியாகும். இப்பொருட் காட்சி மைதானத்தில் செய்தி மக் கள் தொடர்புத்துறை, வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை. இந்து சமய அற நிலையத்துறை,
காவல்துறை உள் ளிட்ட 27 அரசுத்துறை அரங்கு களும், மதுரை மாநகராட்சி, தமிழ் நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரி யம், ஆவின் உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்கள் மூலம் 6 அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்க ளுக்கு விளக்கம் அளிக்க அந்தந்த துறைகளின் சார்பாக பொறுப்பு அலு வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங் களை பறைசாற்றும் வகையில் “ விடு தலைப் போரில் தமிழகம்” என்ற தலைப்பிலும், உலகப் பொதுமறை யாம் திருக்குறளின் பெருமையை எடுத்துரைக்கும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் சார்பாக குறளோவிய கண்காட்சி அரங்கு உள்ளிட்ட சிறப்பு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல, சிறியவர் முதல் பெரியவர் வரை குடும்பத்துடன் பங்கேற்று மகிழ பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகை யில் வீட்டு உபயோகப் பொருட் கள், பல்பொருள் விற்பனை அரங்கு களும், தரத்துடன் கூடிய சுகாதார மான சிற்றுண்டி விற்பனை அரங்கு களும் அமைக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் மாலையில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன . அந்தவகையில், தமிழ் நாடு அரசு மக்கள் நலனுக்காக செயல்படுத்தி வரும் நலத்திட்டங் கள் குறித்து பொதுமக்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையிலும், குடும்பத்துடன் கண்டுகளித்திட பல்வேறு பொழுதுபோக்கு அம சங்களுடனும் பொருட்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று தொடங்கி தொடர்ந்து 45 நாட்கள் இந்த அரசுப் பொருட் காட்சி தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடை பெறும். அரசுப் பொருட்காட்சி நுழை வுக் கட்டணமாக பெரியவர்க்கு ரூ.15-ம், சிறியவர்க்கு ரூ.10 -ம் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் வருகை தந்து இந்த கண்காட்சி அரங்குகளை கண்டு களித்திடுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி னார். இந்த நிகழ்ச்சியில், செய்தித் துறை இயக்குநர் முனைவர்.வீ.ப. ஜெயசீலன், மாவட்ட ஆட்சித்தலை வர் மரு.எஸ்.அனீஷ் சேகர், மாநக ராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் தி.நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் மரு.கா.ப.கார்த்தி கேயன் மற்றும் சட்டமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.