districts

img

மாதர் சங்க வேடசந்தூர்-பழனி ஒன்றிய மாநாடுகள்

வேடசந்தூர், ஜுன் 11- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திண்டுக்கல் வேட சந்தூர் ஒன்றிய 6 ஆவது மாநாடு வேட சந்தூரில் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.ராணி உரையாற்றினார். புதிய ஒன் றிய தலைவராக காமலட்சுமி, துணைத் தலைவராக எஸ்.எம்.பழனியம்மாள், செயலாளராக கார்த்திகைச்செல்வி , துணைச்செயலாளராக கனகவள்ளி, பொருளாளராக ஹரிப்பிரியா ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நூறு  நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி களிலும் விரிவுபடுத்த வேண்டும். படித்த பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பழனி 
மாதர் சங்கத்தின் பழனி ஒன்றிய 5 ஆவது மாநாடு பழனியில் நடைபெற் றது. மாநில துணைத்தலைவர் என்.அமிர்தம், மாவட்டச்செயலாளர் ஜி. ராணி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர். வனஜா, ஆகியோர் பேசினர். ஒன்றி யத்தலைவராக பொங்கியாத்தாள், செயலாளராக கௌரி, பொருளாளராக கவிதா, நிர்வாகிகளாக கல்பனா, ஆர்த்தி, பேச்சியம்மாள், தேவி ஆகி யோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  பழனி நெய்க்காரபட்டி காலனி, பால சமுத்திரம் அருகேயுள்ள குரும்பபட்டி, ஆயக்ககுடி, கோதைமங்களம் ஆகிய ஊர்களில் பெண்களுக்கு கழிப்பறை வசதியில்லை. இந்த பகுதியில் உள்ள பேரூராட்சி நிர்வாகங்கள் உடனடியாக பொது கழிப்பறை வசதி செய்து தர  வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.       (ந.நி)