திண்டுக்கல். மார்ச் 29- பழனி அரசு மருத்துவ மனையில் வெளி நோயாளி கள் பிரிவு செயல்படும் கட்ட டத்தில் முறையாக சாய்வு தளம் அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தினர் முற் றுகை போராட்டத்தை நடத்தி னர். பழனி அரசு மருத்துவ மனைக்கு நாள் தோறும் ஆயி ரக்கணக்கான நோயாளிகள் வந்துசெல்கின்றனர். பழனி அரசு மருத்துவமனையா னது மாவட்ட தலைமை மருத் துவமனையாக தரம் உயர்த் தப்பட்டு அதற்கான கட்டுமான வேலைகள் நடைபெற்று வரு கின்றன. அரசு மருத்துவ மனையில் உள்ள அனைத்து கட்டிடங்களும் இடிக்கப் பட்டு விட்ட நிலையில் அரசு மருத்துவமனை வளாகத் தில் உள்ள பழனி நகராட் சிக்கு சொந்தமான சிறப்பு காப் பக கட்டிடத்தில் வெளி நோயாளிகள் பிரிவானது செயல்பட்டு வருகிறது. இந்த வெளி நோயாளிகள் பிரிவில் சாய்வுதளம் முறையாக அமைக்கப்படாமல் முழுக்க வழுக்கும் டைல்ஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
கடு மையான உடல் உபாதை களோடு வருகைதரும் நோயாளிகள் இந்த சாய்வு தள பாதையை பயன்படுத் தும்போது வழுக்கி விழக் கூடிய நிலைமை உள்ளது. தினசரி ஐந்துக்கும் மேற் பட்ட நோயாளிகள் வலுக்கி விழுகின்றனர். மாற்றுத்திற னாளிகள் சட்ட வழிகாட்டு தல்கள் எதையும் பின்பற்றா மல் முழுவதும் டைல்ஸ் கற் களை கொண்டு கட்டியது சட்டப்படி குற்றமாகும். எனவே உடனடியாக பழனி அரசு மருத்துவமனை யில் வெளி நோயாளிகள் பிரிவு செயல்படும் கட்டி டத்தில் உள்ள சாய்வுதள பாதையை முறையாக அமைக்க வலியுறுத்தி ஐம்ப துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற காலவரையற்ற முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு பழனி நகரத் தலைவர் காளீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பகத் சிங் கண்டன உரையாற்றி னார். பழனி நகர செயலாளர் தங்கவேல், பொருளாளர் அய்யனார், பழனி ஒன்றிய தலைவர் மணிகண்டன், செயலாளர் கண்ணுச்சாமி, பொருளாளர் பாலகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மருத்துவமனை சார்பில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது. அதன் அடிப்படையில் இன் னும் 15 நாட்களுக்குள் மேற் கண்ட சாய்வுதள பாதையில் அமைக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்களை முழுவதுமாக அகற்றி மாற்றுத்திறனாளி கள் உள்ளிட்ட அனைவரும் பயன்படுத்தும் வகையில் சிறப்பாக செய்து கொடுப்ப தாக வாக்குறுதி அளித்தனர். இதன்பின்னர் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.