districts

மதுரை முக்கிய செய்திகள்

கர்ப்பிணி மகளை பார்க்க சென்ற முதியவர் பாம்பு கடித்து சாவு
திருநெல்வேலி, ஜன. 25- கல்லிடைக்குறிச்சி அருகே மகளை பார்க்க சென்ற முதியவர் பாம்பு கடித்து பலியானார். நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள மேலதிடியூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (55). இவரது மகள் கோகிலாவை கல்லிடைக்குறிச்சியில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.  கர்ப்பிணியாக இருந்த மகளை பார்ப்பதற்காக திங்கட்கிழமை ஆனந்தராஜ் கல்லிடைக்குறிச்சி சென்றுள்ளார். மகளை பார்த்து விட்டு அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்ற ஆனந்தராஜை பாம்பு கடித்தது.உடனே அவரை  உறவினர்கள் மீட்டு அம்பை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனை க்கு கொண்டு செல்லப்பட்ட ஆனந்தராஜ் செவ்வாய்க் கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊர்க்காவல்படை வீரர் தற்கொலை முயற்சி
திருநெல்வேலி, ஜன. 25- நெல்லையில் ஊர்க்காவல்படை வீரர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் இசக்கி (28). இவருக்கு திருமணமாகி விட்டது. இசக்கி நெல்லை மாநகர ஊர்க்காவல் படையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் திங்கட்கிழமை திடீரென வீட்டில் பூச்சி மருந்து சாப்பிட்டு மயங்கி கிடந்தார். உடனே அவரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பேட்டை போலீ சார் வழக்குப் பதிவுசெய்து அவரது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை விசாரித்து வரு கின்றனர்.

பைக் மோதி வாலிபர் பலி
தூத்துக்குடி ,ஜன. 25 திருச்செந்தூரில் சாலையில் நடந்து சென்ற வாலிபர் மீது மோட்டார் பைக் மோதியதில் பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவ தாவது:  தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முத்து நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் கோபால கிருஷ்ணன் (39). இவர் திங்களன்று  திருச்செந்தூர் மெயின் ரோட்டில் நடந்த சென்று கொண்டிருந்த போது, பின்னால் வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பைக்கை ஓட்டிவந்த வீரபாண்டிய பட்டினத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சுடலைமுத்து என்பவர் காயம் அடைந்து திருச்செந்தூர் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

கடன் பிரச்சனையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை!
தூத்துக்குடி ,ஜன. 25 கோவில்பட்டியில் கடன் பிரச்சனையால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவ தாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, வீரவாஞ்சி நகரைச் சேர்ந்தவர் கருத்தபாண்டி மனைவி லட்சுமி (50). இவர் தனியார் நிதி நிறு வனம் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவில் பல  லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தாராம். ஆனால் கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை யாம். இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த லட்சுமி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருச்செந்தூரில் 2 தூண்டில் வளைவு :அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு
தூத்துக்குடி ,ஜன. 25 திருச்செந்தூர் அமலிநகர் மற்றும் ஜீவா நகர் கடற்கரையில் தூண்டில் வளைவு அமைப்பதற் கான இடத்தை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். திருச்செந்தூர் அமலிநகர் மற்றும் ஜீவாநகர் ஆகிய இரு இடங்களில் உள்ள கடற்கரையில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் தனித்தனியாக சுமார் 1.5 கி.மீ. தொலைவில் தலா சுமார் ரூ. 62 கோடி செலவில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் தமிழக மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அமலிநகர் கடற்கரையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மீன்வளத் துறை தலைமைப் பொறியா ளர் ராஜு, தூத்துக்குடி மண்டல பொறியாளர் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர்கள் ரவி, தயாநிதி ஆகியோரிடம் தூண்டில் வளைவு பாலம் குறித்து ஆலோசனை செய்தார்.