districts

img

மதுரை புத்தகத் திருவிழாவில் பாரதி புத்தகாலயம் சார்பில் 25 சிறுவர் நூல்கள் வெளியீடு

மதுரை, செப்.28- மதுரையில் நடைபெறுகின்ற புத்தகத் திருவிழாவில் ஞாயிறன்று குழந்தைகளுக் கான 25 சிறுவர் கதை நூல்கள் பாரதி புத்த காலயம் சார்பில்  வெளியிடப்பட்டன. எழுத்தாளர் உதயசகர் எழுதிய அணி லின் துணிச்சல்,  கூடி வாழ வேண்டும், குறும்புக்கார குட்டி குரங்கு, ஓணான் கற்ற  பாடல், புழுவின் கர்வம், தேன் எடுக்கப்  போன குட்டித் தேனீ ஆறு, சிறார் கிரா மியக்கதைகள்,சிறார் நாடோடிக்கதைகள், கால்களில் ஒரு காடு, கிளிமரம் நூல்களும், பூங்கொடி பாலகுமரன் எழுதிய மந்திர கோட், கலகல வகுப்பறை, சிவா எழுதிய  மெல்ல மலரும் ஆசிரியர், டாக்டர் சிரி எழு திய வெள்ளி மயிலிறகு,  பாரதி பாலன் எழு திய வாய் மொழிக் கதைகள் - தொகுதி  1, 2,  ஜப்பான் நாட்டுக் குழந்தைகளுக்கு பிடித்த கதைகள் - 1    - சூ. ம.ஜெயசீலன் எழுதிய இரண்டு   ஜப்பான் நாட்டுக் குழந்தைகளுக்கு பிடித்த கதைகள் நூல்கள்,  சர்மிளா தேவி எழுதிய மகிழினி ஐஎப்எஸ், சரிதா ஜோ எழுதிய கட லுக்கு அடியில் மர்மம், அன்பழகன் கண் ணப்பன் கேட்ட கேள்வி?, விட்டல்ராவ் எழு திய தமிழக கோட்டைகள், ச. சுப்பாராவ் எழு திய கிளியும் அதன் தாத்தாவும், கிழவியும் பூனையும் , மதிவதனி, செல்வ ஸ்ரீராம் எழு திய என்ன சொன்னது லூசியானா?,   சக.முத்துக்கண்ணன், ச.முத்துக் குமாரி, ரா. ராணி குணசீலி ஆகியோர் எழு திய புத்தகக் கண்காட்சிக்கு ஏன் வர வேண்டும் ஆகிய 25 புத்தகங்களை ஆசிரி யர்களுடன் அரசு  பள்ளி மாணவ, மாண வியர்கள் வெளியிட்டனர்.