districts

மதுரை முக்கிய செய்திகள்

மயிலாடுதுறை - திருச்சி முன்பதிவில்லா விரைவு ரயில் மீண்டும் இயக்கம்

பாபநாசம், டிச.15 - பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலர் சரவணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மயிலாடுதுறை-திருச்சி இடையே வண்டி எண் (16233/16234) முன் பதிவில்லா எக்ஸ்பி ரஸ் ரயில் சேவை 15.12.2021 (புதன்கிழமை) முதல் மீண்டும்  இயக்கப்படுகிறது. இந்த விரைவு வண்டி காலை 8.15 மணிக்கு  மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்டு காலை 10.40 மணிக்கு திருச்சி சென்று சேரும். மறு மார்க்கத்தில் இந்த  ரயில் மதியம் 12.50 புறப்பட்டு பகல் 3.15 மணிக்கு மயிலாடு துறை சென்று சேரும்.   பாபநாசத்தில் இருந்து திருச்சி செல்ல காலை 9.05 மணிக்கும், மயிலாடுதுறை செல்வதற்கு மதியம் 2 மணிக்கும்  வண்டி வந்து செல்லும். கட்டண விபரம்: பாபநாசம் - திருச்சி  - ரூ.45, பாபநாசம் - மயிலாடுதுறை - ரூ.45, (குறைந்தபட்ச கட்ட ணம் ரூ.30). இந்த விரைவு வண்டி குத்தாலம், ஆடுதுறை, கும்பகோ ணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர் ஆகிய ரயில் நிலையங் களில் மட்டும் நின்று செல்லும். இந்த வண்டி திங்கள் முதல்  வெள்ளிக்கிழமை வரை இயங்கும். சனி, ஞாயிறு கிழமை களில் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாலிபால் விளையாட்டு போட்டிகள்

அரியலூர், டிச. 15- அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை எதிர்புறம் உள்ள திட லில் Go-HEIGH VOLLEYBALL CLUB சார்பாக இளைஞர்களுக் கான இரண்டு நாட்கள் வாலிபால் விளையாட்டு போட்டிகள்  நடந்தன.  தமிழகத்தில் மதுரை, இராமநாதபுரம் உள்பட பல்வேறு  மாவட்டங்களில் இருந்து வாலிபால் அணியினர் பங்கெடுத்து  விளையாடினர். அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா விளையாட்டுப் போட்டியை துவக்கி வைத்தார். பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். பல அணிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து இராமநாதபுரம் - அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடையக்குறிச்சி ஆகிய இரண்டு அணி களுக்கான போட்டியை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளரும் ஏஐடியூசி மாவட்ட பொதுச்  செயலாளருமான டி.தண்டபாணி துவக்கி வைத்து வாழ்த்திப்  பேசினார்.

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பாபநாசம், டிச.15 - அண்டக்குடியைச் சேர்ந்தவர் முருகானந்தம்(40) என்பவர்  திங்களன்று மாலை பாபநாசம் அருகே கபிஸ்தலத்தை அடுத்த  மேல கபிஸ்தலம் மெயின் சாலையிலுள்ள தனது வெல்டிங் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின் கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கிய தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்  பேரில் கபிஸ்தலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் தேர்வு'

தஞ்சாவூர், டிச.15 - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாண வர், மாணவியர் விடுதிக்கு முதல்கட்ட  தேர்வு திங்கள் கிழமை நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற, நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை தனி வட்டாட்சியர் (ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை) செந்தில்குமார்,  பேராவூரணி வட்டாட்சியர் த.சுகுமார், கல்விப்புரவலர் ஏ. ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர். பேராவூரணி தொகுதிக் குட்பட்ட விடுதிக் காப்பாளர்கள், தேர்வுக்குழு உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர். இதில் பேராவூரணி தொகுதிக்குட்பட்ட 10 -க்கும் மேற்பட்ட விடுதிகளுக்கு முதற்கட்ட மாணவர் சேர்க்கை  நடைபெற்றது. 

மரக்கன்றுகள் வழங்கல்

பாபநாசம், டிச.15 - தமிழ்நாடு நீடித்த பசுமை போர்வை இயக்கம் 2021-22-ன்  கீழ் பாபநாசம் அருகே அம்மாபேட்டையை அடுத்த காவலூர்  கிராம விவசாயிகளுக்கு வேளாண்மை துணை இயக்குனர் மாநில திட்டங்கள் அ. கோமதி தங்கம் இலவச மரக்கன்று களை வழங்கினார்.  இத்திட்டத்தின்கீழ் தேக்கு, மலைவேம்பு, ஈட்டி, வேங்கை,  செம்மரம் ஆகிய மரக்கன்றுகளை தனிப்பயிராக நடவு செய்திட  ஏக்கருக்கு 160 கன்றுகள், வரப்பு பயிராக நடவு செய்ய  ஏக்கருக்கு 50 கன்றுகள் வீதம் இலவசமாக வழங்கப்படு கிறது. இக்கன்றுகளை நடவு செய்து, நான்கு ஆண்டுகள் வரை  பராமரித்திட மானிய உதவி வனத்துறை மூலம் வழங்கப்பட  உள்ளது. விவசாயி நடவு செய்ய உள்ள நிலத்தின் விவரம், விவ சாயியின் ஆதார் எண், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை  ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவருக்கான விண்ணப்பம் மற்றும் வழங்கல் ஆணை கொடுக்கப்படுகிறது.  இதன்படி, தஞ்சாவூரில் உள்ள வனவியல் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  அம்மாபேட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம  வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படும் களஞ்சேரி, பள்ளி யூர், இரும்புதலை, திருவையாத்துக்குடி, வடக்குமாங்குடி, வேம்புகுடி, காவலூர் ஆகிய கிராம விவசாயிகளுக்கு முன்னு ரிமை அடிப்படையில் இத்திட்டத்தில் மரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன. தேவைப்படும் விவசாயிகள் தங்கள்  பகுதி விரிவாக்க அலுவலரை அணுகிடலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது. 

செம்மை நெல் சாகுபடி தொகுப்பு செயல் விளக்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு

புதுக்கோட்டை, டிச.15 - அரிமளம் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்  திட்டப் பணிகளை ஆய்வு செய்த பின்னர் ஆட்சியர் கூறுகை யில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தேசிய உணவு பாது காப்பு இயக்கம் - அரிசி திட்டத்தின்கீழ் 200 ஹெக்டேர் பரப்பள வில் நெல் நேரடி விதைப்பு, வரிசை நடவு, செம்மை நெல் சாகுபடி தொகுப்பு செயல்விளக்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.  இதில் அரிமளம் வட்டாரத்திற்கு வரிசை நடவு தொகுப்பு  செயல் விளக்கம் 20 ஹெக்டேருக்கு ரூ.1.50 லட்சம் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு விதை நெல், நெல் நுண்ணூட்ட கலவை உரம், உயிர் உரங்கள், இலை வண்ண அட்டை, இயற்கை உரம், கோனோ களையெடுக்கும் கருவி ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் மிரட்டுநிலை கிராம விவசாயிகளுக்கு இலை வண்ண  அட்டையை பயன்படுத்தி தேவையறிந்து தழைச்சத்து உரமிடு தல் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. எனவே, விவசாயிகள் அரசின் வேளாண் திட்டங்களை உரிய  முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றார்.

கும்பகோணத்தில் இருந்து  எரவாஞ்சேரிக்கு புதிய பேருந்து துவக்கம்

கும்பகோணம், டிச.15 - கும்பகோணம் அருகே உள்ள கிராம மக்களின் கோரிக்கையை  ஏற்று தமிழக அரசு பொதுமக்களின் வசதிக்காக கும்பகோ ணம் நகர்-2 கிளை, தடம் எண். 346ஏ புறநகர் பேருந்து  மூலம் கும்பகோணத்திலிருந்து - எரவாஞ்சேரி (வழி) திருவி டைமருதூர், ஆடுதுறை, ஆவணியாபுரம், மஞ்சமல்லி, எஸ். புதூர், வடமட்டம் வரை இயங்கும் பேருந்து, கும்பகோணத் தில் இருந்து எரவாஞ்சேரிக்கு காலை 6.25 மணிக்கும், மாலை  4.40 மணிக்கும் அதே போன்று எரவாஞ்சேரியில் இருந்து கும்ப கோணத்திற்கு காலை 8.10 மணிக்கும், மாலை 5.55 மணிக்கும் இயக்கப்படும் என தமிழக முதல்வர் வழிகாட்டுத லின்படி போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித் தார். அதன் தொடர்ச்சியாக, மேற்படி வழித்தடங்களில் இயங்கும் பேருந்தினை திங்களன்று காலை 8 மணிக்கு எஸ்.புதூரிலிருந்து, மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம், முன்னிலையில் தமிழ்நாடு அரசின் தலைமை  கொறடா கோவி.செழியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், கும்பகோ ணம் மண்டலம் பொது மேலாளர் ஜெபராஜ் நவமணி, துணை  மேலாளர் (வணிகம்) பி.கணேசன், உதவி மேலாளர் (இயக்கம்- கூட்டாண்மை) ஜி.நடராஜன், உதவி பொறியாளர் (வணிகம்)  ஜி.ராஜ்மோகன், கும்பகோணம் நகர்-2 கிளை மேலாளர் சி.மதன்ராஜ் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கட்சியில் இருந்து நீக்கம்

தஞ்சாவூர், டிச.15 - கட்சியின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், கட்சியின் அரசி யல் ஸ்தாபன விரோத செயல் பாடுகளில் ஈடுபட்டதற்காக வும், கட்சியின் மாவட்டக் குழு  உறுப்பினராக இருக்கும் பி. விஜயாள் மற்றும் பாபநாசம் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.உமாபதி, ஏ.மாலதி ஆகிய மூன்று தோழர்களும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப் பட்டனர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சா வூர் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரி வித்துள்ளார். 

விழிப்புணர்வு நிகழ்ச்சி

தஞ்சாவூர், டிச.15 - தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றி யம் செருபாலக்காடு ஊராட் சியில் கள்ளச் சாராயத்தின் தீமைகள் குறித்த விழிப்பு ணர்வு கலைநிகழ்ச்சி நடை பெற்றது.  தஞ்சை மாவட்ட காவல் துறை, கலால் பிரிவு சார்பில் கலைமகள் நாடக குழு  மூலம்  நடைபெற்ற கலை நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ருக்மணி மணியன் தலைமை வகித்தார். கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், சமூக கேடுகள், குடிப்பவரின் குடும்பத்தின் நிலை குறித்து  கலைநிகழ்ச்சி மூலம்  விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டது. நிகழ்ச்சியில் கிராமத்தி னர், பெண்கள் கலந்து கொண்டனர்.



 

;