மதுரை, ஏப்.24- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஞாயிறன்று கொடி யேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக மே 2-ஆம் தேதி மீனாட்சி சுந்த ரேஸ்வரர் திருக்கல்யாணம், மே 5-ஆம் தேதி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ஞாயிறு தொடங்கி மே 4-ஆம் தேதி வரை நடக்கி றது. இது வெறும் திருவிழா மட்டுமல்ல வர லாற்றுத் தொன்மை மிக்க நகரம் என்பதை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள் உணர்த்துகின்றன. மீனாட்சி அம்மன் கோவிலில் அமைந் துள்ள கல்வெட்டுகள் இந்தியத் தொல்லியல் துறையால் பிரதியெடுக்கப்பெற்று பாது காக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தொல்லி யல் வல்லுநர் சாந்தலிங்கத்தால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மொத்தம் 450 கல் வெட்டுகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. இவற்றுள் 447 கல்வெட்டுகள் முற்றிலும் தமிழில் அமைந்த கல்வெட்டுகள் ஆகும். இந்த கல்வெட்டுகளில் முழுமையான பாடங்களில் உள்ளவை 78 கல்வெட்டுகளே. எஞ்சியவை, துண்டு கல்வெட்டுகள். இவற் றின் மொத்த எண்ணிக்கை 341. துண்டு கல்வெட்டுகள் பெரும்பான்மையானவை கி.பி.13-ஆம் நூற்றாண்டின் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகளே. இந்த நிலையில் சித்திரைத்திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பான ஆலோ சனைக் கூட்டம் மதுரையில் திங்களன்று நடை பெற்றது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனி வேல் தியாகராஜன், ஆட்சியர் அனீஷ்சேகர், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மேயர் இந்திராணி, துணைமேயர் டி.நாக ராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், கடந்தாண்டு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய போது கூட்ட நெரிசலின் காரணமாக எதிர்பாராத விதமாக உயிரிழப்பு நிகழ்ந்தது. இத்தகைய சம்ப வங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மேம்படுத்த வேண்டும். போதிய சி.சி. டி.வி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும். தேரோட்ட நிகழ்விற்கு முன்பு தேரின் உறு தித் தன்மையை ஆய்வு செய்து பொதுப் பணித்துறையின் சான்றிதழ் பெற வேண்டும். தேர் செல்லும் வழி, கள்ளழகர் ஊர்வலம் வரும் வழிகளைக் கண்காணித்து தாழ்வான நிலையில் மின் விநியோக கம்பிகள் உள்ள னவா என்பதை கண்டறிந்து உரிய முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்ய வேண்டும். மக்களுக்கு குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவற்றை உறுதி செய்ய வேண் டும். அவசரகால சூழ்நிலையை எதிர்கொள்ள போதிய மருத்துவக்குழுக்கள் அமைக்க வேண்டும்.
அரசு இராஜாஜி மருத்துவமனை நிர்வாகம் தயார் நிலையில் விழிப்புடன் பணி யாற்ற வேண்டும் என ஆலோசனைகள் வழங் கப்பட்டது. கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சும் பைகள் இதற்கிடையில் கள்ளழகர் வைகையாற் றில் இறங்கும் போது கள்ளழகர் போல் வேடம் தரித்தவர்கள் அவர் மீது தண்ணீரை பீய்ச்சியடிப்பது வழக்கம். அதற்கான தோப்ப றைகள் (தோல் பைகள்) விற்பனைக்கு வந்து விட்டது. இந்தப் பைகள் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் பல முறைகளாக தயா ரிக்கப்படுகிறது. இந்தத் தொழிலில் போதிய வருவாய் இல்லாவிட்டாலும், எட்டு தலைமுறையாக இப்பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வரு கின்றனர். ஆட்டுத்தோல்களை இவர்கள் புதுக்கோட்டை, திண்டுக்கல், சமயநல்லூர் (டபேதார் சந்தை) பகுதிகளிலிருந்து வாங்கி வருகின்றனர். அவற்றை வாங்கி பதப் படுத்தி, மெருகேற்றும் வேலைகளில் ஈடு படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயி ரம் முதல் 15 ஆயிரம் தோப்பறைகளை இவர் கள் தயாரிக்கின்றனர். ஒரு தோப்பறை ரூ.300 முதல் ரூ.600 வரை விற்கப்படுகிறது. இது தோப்பறையின் தண்ணீர் சேமிக்கும் அள வைப் பொறுத்து மாறுபடும்.