districts

img

கூடைப்பந்து போட்டியில் லயன்ஸ் பள்ளி வெற்றி

திருவில்லிபுத்தூர், ஜூலை 20-  விருதுநகர் கூடைப்பந்து கழகம், கெயிட்டி கூடைப் பந்து கிளப் சார்பாக கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் திருவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்கு லேசன் பள்ளி மாணவர்கள் தங்கப் பதக்கங்களை வென்றனர்.  லயன்ஸ் பள்ளியின் சீனியர் பிரிவில் பங்கு கொண்ட  மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும் சுழல் கோப்பையையும் 14 வயதிற்கு உட்பட்ட ஜுனியர் பிரிவில் தங்கப்பதக்கமும் பெற்ற னர். போட்டிகளில் பங்குகொண்ட மாணவர்களையும் பரிசுகளைப் பெற்ற மாணவர்களையும் உடற்கல்வி ஆசிரி யர் முத்துராஜ், பள்ளித் தாளாளர் லயன் ஆர். வெங்கடா சலபதி, பள்ளி முதல்வர் எம்.பி.முருகன் மாவட்டக் கல்வி  அதிகாரி ஞானகௌரி மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.